உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பூவையின் சிறுகதைகள்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26

பூவையின் சிறுகதைகள்



தெரியும், நேரங்கெட்ட அந்நேரத்தில் அவன் மறுபடி எழுத்துக்காரன் ஆனான். சிருஷ்டியின் கர்வம் அவன் நெஞ்சிலும் நினைவிலும் ஆலப்புழைப் பச்சை ரக ஏலக்காயின் மணத்தைக் கூட்டுகிறது! நினைவுகள் சிரிக்கவே, சுற்றிச் சூழ விழிகளைச் சுழலவிடுகிறான் அவன். இருந்திருந்தாற்போல், அவனிடம் ஒரு பதற்றம் மிஞ்சியது. அவன் அமர்ந்திருந்த பலகைக்கு அடியிலே கிடந்த அந்த முரட்டு மனிதனை அவன் மறந்துவிட மாட்டான், மிதித்து விடவும் மாட்டான்!

ஆஹா!

யார், அந்தப் பூவை...?

ஒ...!

பூலோக ரம்பையாகத்தான் இருக்க வேண்டும். அவள் தான் உறங்குகிறாள்; ஆனால், அவள் அழகு உறங்கவில்லையே! நல்ல பருவம்; நல்ல வயது சேர நல்நாட்டு இளம்பெண் அல்லவா? தமிழ்ப் பெண்மை குலுங்க, அடக்க ஒடுக்கமாகச் சாய்ந்து கிடந்தாள். அவளுடைய மார்போடு மார்பாக அணைந்து கிடந்த 'ஆண்குட்டி உறக்கக் கிறக்கத்தில் பாலமுதம் பருகிடத் துடிக்கிறது; தவிக்கிறது. பட்டு மேனியில் பட்டும் படாமலும் ஆடிவரும் தேனாகத் தவழ்ந்து கிடந்த 'முண்டு ரொம்பவும் கெட்டிதான். மதி:.

அவனும் தவித்தான்; துடித்தான். 'சேச்சி எழுந்திருக்க மாட்டாளா? குழந்தையின் அச்சன் எங்கே கிடக்கிறானோ? பாவம்! அதற்கு ஞானப்பால் வேண்டாமே, பரமாரி அம்மே!

'குட்டி வீரிடுகிறது ...

அது குழந்தை

குழந்தையும் தெய்வமும் ஒன்றுதானாம்; ஒன்றேதானாம்...! 'ஒன்றே குலம் ... ஒருவனே தேவன் நினைப்பதற்கென்று இப்படிச் சில விதிகள்...!

அவன் இப்பொழுது பச்சைமண் ணின் செப்பு வாயைத் தேடினான். ஆனால், அவன் திருஷ்டியில் பட்டதோ, பட்ட மரம் தளிர்த்த மாதியான செளந்தர்யமாய தரிசனம் ஒன்று. மெய்சிலிர்க்க, நினைவுகள் வீட்டுக்காரியிடம் தஞ்சமடைய, நல்லவேளையாக, அவன்