உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பூவையின் சிறுகதைகள்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3

6

பூவையின் சிறுகதைகள்

ரொம்ப ரொம்ப ரோசக்காரர். ரொம்ப ரொம்ப மானி பிறந்த மண்ணை மட்டும் துறந்திட்டார் அம்பலவாணன் செட்டியார்ணு தோணல்லே அநுதினமும் கைகடுக்கக் கும்பிட்டுக் கால்கடுக்க வலம் வந்த இந்தத் தெய்வத்தையுங் கூடத் துறந்திட்டாரோன்னு கூட எனக்குத் தோணுது. இல்லாட்டி, எந்தத் தில்லியிலே இருந்தாலும், இந்த நவராத்திரிக் கெடுவுக்கு இங்கிட்டு வந்து குதிச்சிருக்க மாட்டாரா? ஈச்வரா"

ஒதுவார் கண்களைத் துடைத்துக் கொண்டார்.

"அது சரி, இப்ப என்ன ஆகிறதாம்? அம்பலவாணன் செட்டியாரோட உபயமண்டபப்படி என்ன ஆகிறதாம்?" என்று கேட்டது கடுக்கன் இளவட்டம்.

"சட்டுப்புட்டுன்லு ஒரு முடிவுக்கு வந்தால் தான் தேவலாம். பசிநேரம் இது" என்றது புதிய மீசை

கோயிலுக்குச் சொந்தம் பூண்டிருந்த எட்டுப் பேர்களும் ஒருவரை ஒருவர் மேலும் கீழுமாகப் பார்த்துக் கொட்டக் கொட்ட விழிக்கலாயினர்.

ஒதுவார் நரை திரண்ட முடிகளை வேதனையோடு கோதிவிட்டபடி, அவர்களை ஒரு முறை ஊடுருவினார். பிறகு, "ஒரு முடிவும் தோணலிங்களா உங்களுக்கெல்லாம்?" என்று வேதனை தாளாமல் வினவினார்.

"ஊஹாம்!"

குரல்கள் எட்டு வகையாகப் பிசிறு தட்டிக் கேட்டன.

"ஒரு வேளை, அம்பலவாணன் செட்டியார் எங்காச்சும் அநாதையாகிக் காலமாகி....?

உள்ளம் நடுங்க, உடல் நடுங்கக் குறிக்கிட்ட ஒதுவார். "ஐயையோ. உங்க பேச்சை ஈவிரக்கமில்லாமல் முடிச்சுடாதீங்க, கடுக்சன்காரத் தம்பி" என்று கெஞ்சினார், விழிகள் துளும்பின; நெஞ்சம் துளும்பியது.

"சரி, சரி, ஏதாச்சும் முடிவு பண்ணினால் தானே?"

"ஒண்ணமே மட்டுப்படலையே!"