உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருமந்திர ஆராய்ச்சியும் ஒப்புமைப் பகுதியும்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12

12 எப்பரி சாயினும் ஏத்து மின் ஏத்தில்ை அப்பரி சீசன் அருள்பெற லாமே-30 எனத் தெளிவுற விளக்கபட்டுள்ளது. ஐந்தெழுத்தின் பெருமை, இருவினையொப்பு, மலபரிபாகம் முதலிய உண்மைகள் எடுத் தோதப்பட்டுள-966, 977, 1527. iii தல தரிசனத்தின் இன்றிமையாமையும் அங்ஙனம் வணங்கிஞேர் நெஞ்சத்துள் இறைவன் கோயில் கொள்வதும் - நாடு நகரமும் கற்றிருக் கோயிலும் தேடித் திரிந்து சிவபெரு மானென்று பாடுமின் பாடிப் பணிமின் பணிந்தபின் கூடிய நெஞ்சத்துக் கோயிலாக் கொள்வனே-1445 என்னும் பாடலில் விளக்கப்பட்டுளது. இச் செய்யுள் தேடிக் கண்டு கொண்டேன் ... தேவனே என்னுளே தேடிக் கண்டு கொண்டேன். ' என்னும் அப்பர் பெருமான் தேவாரப் பாடலை கினேவூட்டு கின்றது. திருமந்திர நூலின் பழமையும் பெருமையும் திருமந்திரம் மிகப் பழைய நூலாதலின் திருமூலருக்குப் பின்வந்தோர் பலரும் இந்நூலின் சொல்லையும் பொருளையும் ஆண்டுள்ளார்கள் (ஒப்புமைப் பகுதியைப் பார்க்க-பக்கம் 45). i பெரியார் துடிசைகிழார் தமிழ் மூவாயிரத்தினின்றும் திருவள்ளுவர் எடுத்தாண்ட பகுதிகள்' என்று சில பகுதிகளே எடுத்துத் தமது திருமந்திர நாற்பதிப்பிற் காட்டியுள்ளார். ii சைவ சித்தாந்த மகா சமாஜப் பதிப்பில் உள்ள திரு மூலர் வரலாற்றுக் குறிப்பில் திரு ம. பாலசுப்பிரமணிய முதலியாரவர்கள் திருவாசகத்துக்கும் திருமந்திரத்துக்கும் பல வகையான சொல், சொற்ருெடர், கருத்து ஒற்றுமைகள் காணப் படுதலால் இவ்விரண்டு நூல்கட்கும் ஒரு தொடர்பிருத்தல் வேண்டும் '-என எழுதியுள்ளார்.