தேவி அநுபூதி 11 ஊராய் உண்பலிக்கு என்று சென்று திரிகின்ற பெருமான் மகிழும் ஞான சொரூபியே! (கு) ஊரூர்...பெய்பலி கொள்ளும் பிரான் * * *_ சம்பந்தர், 3-122-4. 17. சிவலோகம் பெற அகிலாண்டமும் ஆண்டருள் நாயகியே! சகியாவகை ஆகுலம் தாக்குதலால் திகிலாண்டுளன் நான் ! சிவ லோகமதிற் சுகியாண்டென ஓர்மொழி சொல்லுதியோ. (உ) சகல அண்டங்களையும் ஆண்டருளும் தேவியே! பொறுக்க முடியாத வகையில் கவலைகள் என்னைத் தாக்குகின்றன ; அதனல் மிக்க அச்சம் கொண்டுள்ளேன் கான். 'சிவலோகத்தை நீ அடைந்து சுகமாயிரு” என்று ஒரு சொல் நீ சொல்லி அருளுக. (கு) அகிலாண்ட நாயகி-திருஆனைக்காத் தேவி பெயர் ; காதவடிவி அகிலம் பரந்தவள்’-திரு ஆனைக் காத் திருப்புகழ். திகில் ஆண்டுளன் - திகில் (பயம்) கொண்டுள்ளேன். சுகி ஆண்டு - சுகத்தை அனு பவித்து இரு. (ஆண்டு அவ்விடத்திற் சுகி எனலு மாம்.) o 18. கருத அண்ணுமலை என்னும் அரும்பதியில் உண்ணுமுலை என்னுமோர் உத்தமியே! கண்ணுமுனை கான் கருதும்படி நீ எண்ணுவிடில் என்கதி யாதுரையாய்.
பக்கம்:வைஷ்ணவி சந்நிதி முறை-1.pdf/39
Appearance