உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பூவையின் சிறுகதைகள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை எஸ். ஆறுமுகம்

21



  • بسم

திரும்பக் கொடுத்திட்டுப் போகவேனும்னுதான் வந்தேன். காந்தி மகாத்மா செத்துப் போயிட்டதாக நான் இன்னமும்கூட நம்பாமல்தான் இருந்துக்கிட்டிருக்கேன்! ... இந்த நிலைமையிலே, ஊரார் மெச்ச வெளிவேஷம் போடுற உங்களை மாதிரி போலி மனுசங்களோட நன்கொடையை காந்தி விழாவுக்கு உபயோகப்படுத்தினா, அது தெய்வத்துக்கே அடுக்காது: காந்தி மெய்யாலுமே செத்துத்தான் போயிட்டார்னு நான் கூட நம்பத்தான் நேரிடும். அப்பாலே?"

"ஊம், அப்பாலே?"...

"என் மகன் வீரமணிக்கு உங்க மகள் செண்பகத்தைப் பெண் கேட்கவும் வந்தேனுங்க, கங்காணி ஐயாவே"

கங்காணி விம்மினார்; உணர்ச்சிவசப்பட்ட நிலையிலே விம்மினார். "சாம்பான், ஒங்களுக்குக் கோடிப் புண்ணியம் கெடைக்கும்; காந்தி பிறந்த நாள் விழாவுக்கு நான் தந்த நன்கொடையை மட்டும் என்கிட்டே திரும்பத் தந்திடாதீங்க... என்னையும் ஒரு மனிதனாகத் தலைநிமிர்ந்து நடமாட ஒரு சந்தர்ப்பத்தையும் கொடுத்திடுங்க... என்ன, சரிதானே? ... ம்... வீரமணி! என்னோட கொஞ்சம் உள்ளே வாங்க!" என்று வீரமணியை அழைத்தார். "சாம்பான், நீங்களும் வாங்க, அங்களாம்மை! நீங்களும் வாங்க!"என்றார்.

அப்போதுதான், செண்பகம் கண்களை மெள்ளத் மெள்ளத் திறந்தாள்.

வீரமணி செருமினான்.

"வீரமணி, என்னோட மகளை உங்களோட அன்புக் கைகளிலே ஒப்படைக்கப் போற நல்ல சேதியைச் சொல்லத்தான் நான் உங்களைத் தேடிப் புறப்பட்டேன். தெய்வம் தேடி வர்றமாதிரி, நீங்களே வந்தீட்டீங்க... உங்களுக்குச் சொந்தமாக இருக்க பொசிப்பு இல்லாத உயிர் வேண்டவே வேண்டாம்னு எங்க பாதாளக் கேணியிலே விழுந்த எம் மகள், உங்களுக்காகவே செத்துப் பிழைச்சிருக்காளுங்க, வீரமணி! அன்பின் சட்டம் சரணாகதி அடைகிறதுதான் அப்படின்னு காந்தி சொன்ன பேச்சோட உண்மையும் நியாயமும் தருமமும் இப்பத்தான் எனக்குப் புரிஞ்சுதுங்க, வீரமணி!"விம்மி வெடிக்கிறார் கங்காணி.

Xo Š.ኮረ ✓ዕሪ ఫిడ אצל .*

  1. 8\ 7#N