உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பூவையின் சிறுகதைகள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3

7

பூவை எஸ். ஆறுமுகம்

"அந்த அம்பலவாணன் செட்டியார் திருவிழாவை நடத்தாமல் விட்டுப்புட வேண்டியதுதானே?" -

"என்ன சொன்னிங்க, மீசைக்காரத் தம்பி?" ஆவேசமும் ஆத்திரமும் முழங்கக் கேட்டார் ஒதுவார். நெற்றி நரம்புகள் புடைத்தன.

"பின்னே, என்னவாம்?

ஒதுவார் ஆற்றாமையோடு பெருமூச்செறிந்தார். "சோதனைகள் பாழாய்ப்போன இந்த மனிதர்களைத்தான் விட்டு வக்கிறதில்லைன்னு நினைச்சிருந்தேன். இப்போ தெய்வத்துக்கும் அல்லவா சோதனை வந்திட்டுது? ஈச்வரப் பிரபோ குரல் தழுதழுத்தது.

"ஒதுவார் ஐயா, நீங்களே இதுக்கு ஒரு யோசனை சொல்லுங்களேன்?" -

ஒதுவார் உணர்ச்சி சுழிக்கப் பேசினார் : "லட்சக்கணக்கான பணத்திலே புரண்டுக்கிட்டு இருக்கிற உங்களுக்கெல்லாம் தோணாத மார்க்கமும் யோசனையுமா மண்ணிலே புரண்டுக்கிட்டு இருக்கிற எனக்குத் தோனப்போகுது? ஊம். அம்பலவாணன் செட்டியார் எப்படி எப்படியோ உச்சத்திலே வாழ்ந்தவர்; வாழ்ந்து காட்டினவர் அந்த மனிதரை யார் மறந்தாலும் நல்லவங்க ஒருநாளும் மறக்க முடியாது. அது மாதிரியே அவர் வருஷம் வருஷம் கோலாகலமாய் நடத்தி வந்த 'பிட்டுக்கு மண் மண்டபப்படியையும் யாருமே மறக்க வாய்க்காது. அப்படிப்பட்ட புண்ணியவானோட மண்டபப்படியைப் பெருமையோடவும் மனிதாபமானத்தோடவும் ஏற்று நடத்தக் கோயில் அடிமைக்காரங்களாகிய உங்களுக்கெல்லாம் மனசு வரல்லே! பரவாயில்லை. அம்பலவாணன் செட்டியாரோட மண்டபப்படியை என் தலையை அடமானம் வச்சாவது, எப்படியாவது பணம் தோதுபண்ணி நானே நடத்திடுறேன். இது என் கடமையாக்கும்; இது என் பாக்யமாக்கும்! "

கோயிலுக்கு அடிமைப்பட்ட வர்கள் இப்போது மெளனத்துக்கும் அடிமைப்பட்டார்கள்.

XFA. ՀԶ - ※ く ※ ※ تا این عی ※