உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பூவையின் சிறுகதைகள்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i

5

"பெரிய மனுசங்களுக்குக் கொடுக்கத்தானே, பெரியப்பா?

"மனசாலே உயர்ந்த பெரிய மனுசங்களுக்கும் கொடுப்போம்; மனசளவிலே உயரப் பழகிக்கிட்டு வர்ற நம்மளை மாதிரி ஆளுங்களுக்கும் கொடுப்போம்!"

"சவாசு! அப்படியானா, உண்டனவே வாங்கிக்கிடலாம். கங்காணி ஐயாதான், சுளைகளையாய் நூத்தியொரு ரூபா காந்திச் சாமியோட விழாச் செலவுக்குக் தந்திருக்காரே?"

-

"கங்காணி ஐயா பணம் தந்தது வாஸ்தவந்தான். ஆனா, அந்தப் பணத்தை நான் தொடப் போறதில்லே?"

"ஏங்க, அந்தக் காசை நாம தொடப்புடாதுங்களா?"

கி. -* *** err• {& * ヘ - t” ஆமாபடா, மதாடத்தான படாது! "அது பாம்புங்களா, பெரியப்பாரே?

"ஊம்; அந்தப் பாம்பு, நல்லதா, கெட்டதான்னு குணங்குறியைத் தெரிஞ்சுக்கிறவரைக்கும், அதை நான் தொடவே மாட்டேன்; காந்தி விழாச் செலவுக்கு, வளமைப்படி நானே செலவழிச்சுக்கிடுவேன்; காந்தி தெய்வம் தந்த பணத்தை, அந்த மகராசருக்குச் செலவழிக்காமல், பின்னே வேறே யாருக்குச் செலவழிக்கிறதாம்?"

வானக்கரையில், கண்ணுக்குச் சரிவரப் புலப்படாமல், ஆகாயக் கப்பல் ஒன்று, மெல்லிய ஓசை பரப்பி நீந்திக் கொண்டிருந்தது.

"சாமான் சட்டு அம்புட்டுத்தானே, மூத்தவுகளே?" என்று குறுக்கே பாய்ந்தார் முத்தரசன்.

காந்திப் புன்னகையை வெளியிட்டார் சாம்பான். "யாபகம் வந்தால் சொல்லப்பா, முத்தரசா!...” என்றார்.

"மாலை, கீலை வேணுங்களா?" என்று கேட்டவன், பொடியன் பொன்னப்பன். -

"மாலைதான் வேணும்; "கீலை வேணாம்' என்றார் சாம்பான். சிரிப்பின் சலசலப்புக்கு ஊடே காலையிலே, சாயரட்சை மாலை வாங்கியாந்திட்டேன்; ஒரு மாலை, நம்ம காந்திசாமிக்கு