உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கரிப்பு மணிகள்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

வெண்மை, கண் பார்வையை மங்கச் செய்கிறது. பெண் களோ அவர்களுடைய உடலமைப்பு இயல்புக்கேற்ற வேறு. பல உடற்கோளாறுகளுக்கு ஆளாகின்றனர். தூத்துக்குடி வட்டகையில் உப்பள நாட்கூலி பல தொழிற்சங்கங்களின் போராட்டங்களுக்குப் பிறகு ஆண்களுக்கு ரூ. 6-75. பெண் களுக்கு ரூ 4-40 சிறுவர் சிறுமியருக்கு ரூ. 3-00 அல்லது 2-59 என்று பொதுவாக நிர்ணயித்திருக்கின்றனர். (அரசு நிர்ணய கூலி இதைவிடக் குறைவு என்று கேள்விப்பட்டேன்): ஆனால் இந்த நிர்ணயக் கூலி பெரும்பாலான தொழிலாள ருக்கு முழுதாய் கிடைப்பதில்லை. ஏனெனில் தொழிலாளர் கங்காணி, அல்லது காண்ட்ராக்ட் எனப்படும் இடை மனிதர் வாயிலாகவே ஊதியம் பெறுகின்றனர். பதிவுபெற்ற தொழிலாளிகள், அளநிர்வாகத்தினரிடம் நேரடி ஊதியம் பெறுபவர் மிகக் குறைவானர்கள்தாம். அநேகமாக எல்லாத் தொழிலாளரும் இடை மனிதன் வாயிலாகவே நிர்வாகித் தினரிடம் தொடர்பு பெறுகின்றனர். ஒரு நாள் ஒரு தொழிலாளி நேரம் சென்று அளத்துக்குப் போய்விட்டால் அன்று கூலி இல்லாமல் திரும்பி வருவதும்கூட வியப்பில்லை யாம்! குழந்தைகள் ஆண்டைக் கொண்டாடுகிறோம். ஒரு. நாட்டின் எதிர்காலம் மழலைச் செல்வங்களின் வளர்ச்சியைப் பொறுத்தே அமைகிறது என்ற நோக்கில் பல முனைகளிலும் திட்டங்களும் பாதுகாப்புப் பணிகளும் துவங்கப் பெறு கின்றன. அடிப்படைத் தேவைகளுக்கே போராடும் வறியவர் களாகவே நாட்டு மக்கள் பெரும்பாலானவர் நிலைமை இருக்கும்போது சிறுவர் உழைப்பாளிகளாக்கப்படுவதைத் தடைசெய்வது சாத்தியமல்ல. உழைப்பாளிச் சிறுவருக்கு சத்துணவு மற்றும் கல்வி வசதிகளும் அளித்து உதவத் திட்டங்கள் பற்றி ஆராயப்படுகின்றன. இந்நோக்கில் சிறார், எந்தெந்தக் காலங்களில் உழைப்பாளிகளாகக் கூலி பெறு. கின்றனர் என்ற விவரங்கள் இந்நாட் களில் வெளியாகி இருக்கின்றன. அவற்றில் உப்பளத்தில் கருகும் குழந்தை களைப் பற்றி யாரும் குறிப்பிட்டிராதது குறையாக இருக், கிறது. இந்நிலை வெளிஉலகம் அறியாமல் கேட்பாருமற்று,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கரிப்பு_மணிகள்.pdf/8&oldid=657617" இலிருந்து மீள்விக்கப்பட்டது