பக்கம்:கம்பன் கலை.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருபெரும் அவதாரங்கள் 15 "வாங்குதி தனுவை""சாமர்த்தியம் இருந்தால் இதைக் கையிலே வாங்கடா" என்று பேசுகின்றான். அந்த நிலையிலே வில்லை வாங்கினான் இராகவன், வளைத்தான். பரசுராமன் நடுங்கி விட்டான். உடனே இராமன் பேசுகின்றான், "உலகத்திலுள்ள அரசர்களையெல்லாம் கொன்றுவிட்ட பரசுராமா, உனக்குத் தண்டனை கொடுப்பது முற்றிலும் பொருத்தம். 'பூதலத்து அரசையெல்லாம் கொன்றுவித்தனை. ஆனாலும் வேதவித்தாக விளங்கிய ஜமதக்னியின் மகன் நீ. அதுமட்டுமா? தவக்கோலமும் பூண்டிருக்கிறாய். வேத வித்து ஆய மேலோன் மைந்தன் நீ; விரதம் பூண்டாய் ஆதலின் கொல்லல் ஆகாது. ஆகவே உன்னைக் கொல்வது என்பது அவ்வளவு சரியான காரியம் அல்ல. வேதவித்தானவன் மகனாக இருப்பத. னாலே கொல்ல முடியாது; விரதம் பூண்டவன் என்பதனாலேயும் கொல்ல முடியாது. இப்போது என்ன செய்வது? அம்பு இது பிழைப்பது அன்றால் விரும்பியோ விரும்பாமலோ நீ சொன்னாய். நானும் வில்லை வளைத்து விட்டேன். வளைத்த வில்லில் அம்பையும் பூட்டிவிட்டேன். பூட்டின பிற்பாடு அம்பை எடுத்து முதுகிலே செருகிக்கொள்கிற பழக்கம் எனக்குக் கிடையாது." "அம்பு இது பிழைப்பது அன்றால்" பிழைப்பது என்பது பல பொருள்களை உடைய சொல்லாகும். தன்னுடைய குறியை வாங்காமல் அது வராது என்பதும், பிழைப்பது என்றால் தவறு செய்யாது என்கிற பொருளையும் குறிப்பாகத் தருதலும் அதில் அடங்கியிருப்பதைக் காண்கிறோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கம்பன்_கலை.pdf/23&oldid=770750" இலிருந்து மீள்விக்கப்பட்டது