உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பட்டினத்தடிகள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 20 + பட்டினத்தடிகள் 'ஒட்டுடன் பற்றுஇன்றி உலகைத் துறந்தசெல்வப் பட்டினத்தார் பத்திரகிரி பண்புணர்வ தெந்நாளோ?* என்று இவரைத் தாயுமான அடிகளும் பாராட்டுவதை நாம் அறிவோம். திருப்புலம்பல்: 235 கண்ணிகளைக் கொண்ட 'திருப் புலம்பல்' என்ற ஒரு சிறு நூல் பாடியுள்ளார் பத்திரகிரி யார். ஒவ்வொரு கண்ணியும் "எக்காலம்?' என்று முடி வது. இந்நூல் 'திருப்புலம்பல் என்றும் மெய்ஞ்ஞானப் புலம்பல்' என்றும் பெயர் பெற்று வழங்கி வருகின்றது. பிரமன், விஷ்ணு, உருத்திரன், மகேசுவரன் ஆகிய கருத்து பாருக்குள் பஞ்சவர்ணங்கள், ஆன்மா கருவிக ளோடு அவத்தைகளில் புகுதல், ஐந்தெழுத்து, குண்டலி னியோகம், பிறவி வகைகள், பாற்பசு என்ற திருமந்திரக் கருத்து, அட்டாங்க யோகம், புழு குளவி உருக்கொள் வது, ஊமன் கண்ட கனா, திருச்சிலம்பின் ஒசை ஆகிய கருத்துகள் இப்பனுவலில் காணப் பெறுகின்றன. யாவும் சித்தாந்த சாத்திரத் தொடர்கள், கருத்துகள். ஆகவே, இப்பனுவல் சித்தாந்த சாத்திரங்களுக்குப் பிற் பட்டது எனக் கருதுவது பொருந்துவதாகின்றது. மேலும், சிறப்பான மற்றோர் ஒற்றுமை இப்பனுவ லில் காணப் பெறுவது ஈண்டுக் கருதத்தக்கது. இதன் கண்ணியொன்று, எவரெவர்கள் எப்படிக்கண்டு எந்தப்படி நினைத்தார் அவரவர்க்குத் தான்.அப்படி ஆவதுவும் எக்காலம் (178) என்பது. இதன் கருத்தும் சொற்களும் தத்துவப் பிரகா சத்தின், தேவனே எவரெவர் எப்படிச் சிந்தித்தார் சிந்தித்த இடத்தந்த வடிவாகை திடமே. (178) 3. தா.பா. எந்நாட்கணணி அடியார் வணக்கம் - 5