உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பட்டினத்தடிகள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 10 + பட்டினத்தடிகள் (2) திருவெண்காட்டிகள் சரித்திரம்: இது கூறுவது: இவர் தந்தை சிவநேசர்; தாய் ஞானகலையம்மை. இளமை யில் தந்தையார் சிவபதம் அடையவே, அன்னையார் அருமருந்தன்ன மகனை நன்கு பேணிவந்தார். ஒருநாள் இளம் பிள்ளையாகிய திருவெண்காடர் சிவபூசை செய்ய எண்ணியபோது திருவிடைமருதூரில் இருந்த சிவவேதியர் வந்து இவருக்குத் தீட்சை செய்வித்து பூசை செய்ய ஆன்மார்த்த இலிங்கத்தையும் அளித்தார். குருவுக்குத் தட்சிணை கொடுக்கப் பொருளின்றி இவர் மனம் கவன்றபோது இறைவன் அருளால் அளவற்ற செல்வம் பெற்றுக் குருதட்சிணை கொடுத்தார். பின் சிவகலையம்மை என்ற திருநாமமுடைய நங்கையொருத் தியை மணந்தார். ஒருநாள் சிவபெருமான் திருவிடைமருதூரில் சிவ பக்திச் செல்வராய் வறுமையுற்றிருந்த சிவசருமர், சுசீலை என்ற இருவரிடமும் ஒரு தெய்வக் குழந்தையாய்த் தோன்றி, தம்மைக் கொண்டு போய் திருவெண்காடரி டம் பொருளுக்கு விற்று வறுமைப் பிணியைப் போக்கிக் கொள்ளுமாறு கட்டளையிட்டார். அவ்வாறே தம்மிடம் வந்த குழந்தையைத் திருவெண்காடர் பெற்று மருதவா ணர் என்ற பெயரிட்டு வளர்த்து வந்தார். குழந்தைப் பருவத்தில் மருதவாணரிடம் தெய்வத் தன்மை திகழ்ந் தது. தீவாந்தரவாணிகம் எல்லாம் செய்து கப்பலில் வறட்டிகள் நிரப்பி அவற்றின்மூலம் மாணிக்கம் வெளிப் படச் செய்து திருவெண்காடருக்குப் பெரும் செல்வம் கிடைக்குமாறு செய்தார். திருவெண்காடருடைய மனப் பக்குவம் முதலியவற்றை நோக்கி, ஒரு பெட்டியில் "காதற்ற ஊசியும் வாராது காணும் கடைவழிக்கே’ என் றெழுதிய ஒலை நறுக்கும் காதற்ற ஊசியும் வைத்துத் திருவெண்காடரிடம் தருமாறு கொடுத்து அனுப்பி மறைந்து விட்டார். பிள்ளையைக் காணாது தேடிய திருவெண்காடர், அப்பெட்டியைப் பெற்றுத் திறந்து