உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலக்கிய அமுதம்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழர் வரலாறு

73


காலங்களில் சோழர் கைப்பட்டிருந்தன; சில காலங் களில் பாண்டியர் கைப்பட்டிருந்தமையுமுண்டு.

சோழர் வரலாற்றில் மூன்று காலங்கள்

சோழரைச் (1) சங்ககாலச் சோழர் (கி. மு.--

கி. பி. 300), (2) இடைக்காலச் சோழர் (கி. பி.

300-900), (3) பிற்க்ாலச் சோழர் (கி. பி. 900-1300) என மூன்று காலத்தவராகப் பிரிக்கலாம்.

சங்க காலச் சோழர்

சங்க காலச் சோழர்க்குரிய பெயர்களுள் கிள்ளி, வளவன் என்பன சிறந்தவை. கிள் என்பது தோண்டு, வெட்டு என்னும் பல பொருள்களைக் குறிக்கும். நிலத்தைத் தோண்டி வளம் செய்பவன் என்னும் பொருளில் கிள்ளி என்பது வந்திருக்க லாம் என்பது ஆராச்சியாளர் கருத்து. வளமுடைய நாட்டவன் வளவன்' எனப் பெயர் பெறுதலும் உண்டு. சோழரது அரச இலச்சினை புவி. கீழ்வரும் மன்னர் சங்க காலச் சோழர் ஆவர்:- (1) சிபி, (2) முசுகுந்தன், (3) காந்தன், (கி) தூங்கெழில் எறிந்த தொடித்தோட் செம்பியன், (5) செருப்பாழி எறிந்த இளஞ்சேட்சென்னி, (6) மனுநீதிச் சோழன், (7) மு த ற் கரிகாலன், (S) இரண்டாம் கரிகாலன், (இமையம்வரை சென்றவன்) (9) நலங்கிள்ளி,நெடுங் கிள்ளி, மாவளத்தான், (10) வளவன், (11) பெருநற் கிள்ளி, (12) கோப்பெருஞ்சோழன், (18) வ்ேறு சோழ மரபினர் சிலர், (14) நெடுமுடிக்கிள்ளி, இளங்

கிள்ளி முதலியோர்.

இ வ ரு ள் போரிலும் கொடைத்திறத்திலும் முத்தமிழ் வாணரைப் போற்றுவதிலும் தலைசிறந்த வன் இரண்டாம் கரிகாலன். இவன் காலத்தில் வடபெண்ணையாறு வரை சோழப் பேரரசாக பரவி இருந்தது. தெற்கே இலங்கை முடிய இவனது செல்வாக்குப் பெருகி இருந்தது. இவன் இமயம்