பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/520

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

512 முருகவேள் திருமுறை (7- திருமுறை பாணநூ லிட்டு நாவிலே சித்ர மாக்வே கட்டி யொருஞான; வாசம்வி சிப்ர காசியா நிற்ப மாசிலோர் புத்தி யளியாட

  • மாக்ருதா புஷ்ப மாலைகோ லப்ர

வாளபா தத்தி லணிவேனோ, (511 ஆம் பக்கத் தொடர்ச்சி) வனைக் காணுதல் அரிதாதலின் மனோபத்மமான பூ வைத்து. கட்டி' என்றார். அன்போ டுருகி அகங் குழைவார்க் கன்றி என்போன் மணியினை எய்த ஒண்ணாதே அன்பி னுள்ளாகி அமரும் அரும்பொருள் என்று திருமந்திரம் (272, 279) கூறுதலால் அன்பான நூலிட்டு மாலையைக் கட்ட விரும்புகின்றார். பின்னும் அர்ச்சனை பாட்டே ஆகும் என்று பெரிய புராணமும் (தடுத்தாட் 70) ஆரூர் இனிதமர்ந்தார் தாம் படிமக்கலம் வேண்டுவரேல் தமிழ் மாலைகளால் படிமக்கலம்செய்து தொழுதுய்மட நெஞ்சமே வாயே வாழ்த்து கண்டாய்' நா நாளும் நவின் றேத்த எனத் தேவாரம் (அப்பர் 4.102.3; 4-9.5; சம்பந்தர். 2-41.3) முழங்குதலால் . இறைவன் திருப்பணியாம் மாலையைக் கட்டுதற்குப் புனிதமான இடம் நா' எனக்கொண்டு பாமாலை சூட்டவே விரும்புகின்றேன் என்கின்றார்: ஞானக் கிரியையே நன்முத்தி நாடலே எனத்திரு மந்திரம் (1474) உரைப்பதால் நான் கட்டும் மாலையில் ஞானத்தின் நறுமணம் வீசவேண்டும் என்கின்றார். அறிவுடையார் நெஞ்சத் தங்கு நின்றானே எனத் திருமந்திரம் 2364) கூறுவதால் புத்தி (அறிவு) என்னும் வண்டு அம்மாலையில் மொய்க்க வேண்டும் எனவும் விரும்புகின்றார்; உறுநர்த் தாங்கிய மதனுடை நோன் தாள்' எனத்திரு முருகாற்றுப் படையும் நின்னிற் சிறந்த நின்தாள் இணையவை எனப்பரிபாடலும் (4) கூறுதலால்மாலையைத் திருவடியிற் சூட்டுதலே சிறந்தது எனத் தெளிந்து நான் கட்டும் மாலையை ப்ரவாள பாதத்தில் அணிவேனோ என விழைகின்றனர். மேலும், மனமாகிய பத்மம் (தாமரை) கட்டப் படுவதால் அந்தத் தாமரையில் வாசம் செய்யும் திருமகளும் கலைமகளும் கட்டப்பட்டு இவருக்கு வசப்படுவர் - கல்வியும் செல்வமும் வசப்படும் - என்பதும் தொனிதரும். 曹 "மாத்ருகா புஷ்ப மாலை" - எனவும் பாடம் - ஐம்பத்தோ ரெழுத்துக்களை வைத்து பாடப்படும்மாலை மாத்ருகாமாலை "அ" கார முதல் கூடி" காரம் இறுதியாக ஐம்பத்தொரு