உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பட்டினத்தடிகள்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 14 + பட்டினத்தடிகள் விரைவாகச் செயற்படுவதை அறிஞர்கள் நன்கு அறி வர். இத்தகைய உண்மை பட்டினத்தார் வாழ்க்கையி லும் புகுந்து விளையாடுவதைக் கண்டு மகிழலாம். வெண்காடர் உருவப் படங்களில் அவர் கையில் ஒரு கரும்பு காணப்படும். கண்டம் கரியதாம் கண்மூன் றுடையதாம் அண்டத்தைப் போல அழகியதாம் - தொண்டர் உடலுருகத் தித்திக்கும் ஓங்குபுகழ் ஒற்றிக் கடலருகே நிற்கும் கரும்பு. என்ற பாடலில் அடிகள் ஒற்றியூர்ப் பெருமானையே கரும்பாக உருவகித்து மகிழ்ந்து பாடியதை அறியாமல் பிற்காலத்தில் இப் பேய்க் கரும்புக் கதை கட்டிவிடப் பெற்ற கதை என்பது அறிஞர்கட்குத் தெளிவாகத் தெரியத்தான் செய்யும். பட்டினத்தார் பாடியனவாக அவர் புராணம் கூறும் முதற்குறிப்புடைய பல பாடல்கள் இன்று கிடைக்க வில்லை. தங்களைக் கேட்டுப் பிறந்திலம்’, ‘அருள்கூர், 'வையமுய்ய', 'பன்னாக வாடகப் பொற்பாதம் என்பன அப்பாடல்களாகும். அன்றியும் மெய் நாட்டோர் என்ற முதற்குறிப்புடைய பாடலை முதலாகவுடைய 'மாலை” ஒன்று அவர் செய்ததாகப் புராணம் கூறும். இதுவும் இன்றும் கிடைக்கவில்லை. பட்டினத்தடிகள் வாழ்க்கையோடு தொடர்புடைய மற்றொரு பெரியார் பத்திரகிரியார். இவர் காலம் ஏறக்கு றைய கி.பி.1400 ஆகலாம். இதனை அவர் வாழ்க்கை யின் போது காண்போம்.