பக்கம்:தொல்காப்பியப் பொருளதிகார ஆய்வு.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பேராசிரியர் டாக்டர் காவலர் ச. சோமசுந்தர பாரதியார்

         அவர்களது 


தொல்காப்பியப் பொருளதிகார ஆய்வு

தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் மாண்புமிகு துணைவேந்தர் முது முனைவர் ச. அகத்தியலிங்கனார் அவர்களே, பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர்களே, பேராசிரியர்களே. தமிழ்ப்பெரு மக்களே, நண்பர்களே, இங்கு வருகை தந்துள்ள பெருமக்களே! அனைவர்க்கும் எனது உளமார்ந்த வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

தமிழ்நலம் வளர்த்த பேராசிரியர் டாக்டர் நாவலர் ச. சோம சுந்தர பாரதியார் அவர்கள், நெல்லை மாவட்டத்தைச் சார்ந்த எட்டயபுரத்தில் கி. பி. 1879 சூலை 27-இல் சு ப் பி ம னி ய நாயகர்க்கும் அவர்தம் மனைவியார் முத்தம்மாள் அவர்களுக்கும் மைந்தராகப் பிறந்தார். சத்தியானந்த சோமசுந்தாம் என்னும் இயற்பெயருடைய இவர், எட்டயபுரம் அரண்மனையில் நன்கு பேணிவளர்க்கப் பெற்றார்; திருநெல்வேலி சர்ச் மிஷன் உயர் பள்ளியிலும் அதனுடன் இணைந்த கல்லூரியிலும் பயின்று இடை நிலை வகுப்பில் தேர்ச்சிபெற்றார். பின்னர்ச் சென்னைக் கிறித்தவக் கல்லூரியிற் பயின்று இளங்கலை (பி. ஏ) வகுப்பில் தேறினார். பின்பு சட்டக்கல்லூரியிற் சேர்ந்து 1905- இல் சட்டத்தேர்வெழுதி