உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பூவையின் சிறுகதைகள்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"கண்டீங்களாடி பொண்டுகளா இந்த அதிசய கூத்தை? நம்ப பவளக்கொடி வாழ்க்கைப்பட்டால் தன்னோட சொந்த அயித்தமகன் வீரமணிக்குத்தான் வாழ்க்கைப்படுவேன்; இல்லாங்காட்டி காளிகோயில் பாதாளக்கேணியிலே குதிச்சு உசிரைவிட்டுப்புடுவேனாக்கும்"

"மூனு முடிச்சுப் போட்டுப்புட ஏறுமா? அப்படிக்கொத்த ஒருஇருசாமம் வரும்னு புரிஞ்சா, அப்பவே எம்புட்டு அம்மான் மகளைச் சிறைஎடுத்துக் கிட்டுப்பறந்திட மாட்டேனா?"

"ஆயி நான் என்னோட அம்மான் பவளத்தை நினைச்சு இப்போ கிலேசம் காட்டல”

"அறந்தாங்கி புதுக்கோட்டை பஸ் வீட்டைச் சுற்றி மடங்கியது" "இட்லியை நப்புக் கொட்டி சுவைப்பானே!" "சுற்று வட்டையில் ஏகப்பிரசித்தம்”

"அட்டணைக்காலிட்டு குந்தியிருந்த வரைப்பைசா சுருட்டுத் தேடி வந்தது"

"ஆளுமுண்டலை முடங்கலை"

"ஒண்ணுக்கும் உதவாத இந்த ஒண்டியாலே பாவம், ஒறமொறைக்குள்ளார எதுக்கு வீணாவதாலும் சண்டையும்" போன்ற வாக்கியங்களுக்கும் சொற்றொடர்களும் அவருடைய பிறந்த மண்ணின் வழக்குமொழி வாசனையைச் வீசச் செய்கின்றன.

தமிழ்ப்படைப்பு இலக்கியத்தில் சிறுகதையின் வளர்ச்சிக்கும், வாழ்விற்கும் அருந்தொண்டாற்றி சிறுகதைத் தொகுப்பு, புதினம், நாடகம் ஆகிய வரிசைகளில் 175 நூல்களுக்கு மேல்படைத்த அமரர். பூவை, எஸ். ஆறுமுகம் அவர்கள் என்றும் தமிழ் கூறும் நல்லுறவில் மதிக்கப்படுவார்.

துறை. இரா.மு. கல்வியாளர் & எழுத்தாளர் 6, பிள்ளையார் கோயில் தெரு, பழையதாம்பரம், சென்னை-45,