உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பூவையின் சிறுகதைகள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28

பூவையின் சிறுகதைகள்


படுத்திக் கொண்டிருக்கிறது! தாலிப்பொட்டின் புனித நிறச் சரடு பின்கழுத்தின் பூஞ்சை மயிர்த்தொகுதியில் வனவாசம் செய்திருக்கலாம்.

அவன் அந்தக் காமவெறியனை மறுபடி நோக்கினாள்.

ஆனால், அந்தக் காமுகனோ, இன்னமும் கூட அந்தப் பேரழகுச் சிங்காரியையே ரசித்துக்கொண்டிருந்தான்..!

கைந்நொடிப் பொழுது கழிந்தது.

என்ன அநியாயம்...!

அந்தக் காவாவிப்பயல் அவள் காலடியில் குந்தி, சில வினாடிகளுக்கெல்லாம் அவளுக்குப் பக்கத்தில் சாய்ந்துவிட்டான்!

அவனது ஆத்திரம் வளர்ந்தது. யார் இந்தப் பொறுக்கி...? இவன் அந்தப் பெண்ணோட "பர்த்தாவு" அல்லவே அவள் இவனுக்குப் "பாரியாள் ஆகுவும் இருக்க முடியாது. இவன் யாராம்? அப்படியானால், அவளோட புருஷன் எங்கே? தவிப்பும் ஏக்கமும் வளரத் தொடங்கின. 'ஒருவேளை, என் காலடியில் ஸ்மரணை தப்பிக்கிடந்த முரடன் தான் அந்தக் கேரளப் பைங்கிளிக்கு வாய்த்த காதல் கணவனாக இருப்பானோ? அவனுடைய கைகள் துருதுருக்கின்றன! அந்தத் தறுதலைப் பயலை ஹறிப்பி முடியைப் பிடித்து அலக்காகத் துக்கி வெளியே வீசியெறிந்தால் என்ன...?

"பதினாலாம் ராவுத்தது மானத்தே' இந்நேரத்தில் ஏது பாட்டு? யாரோ, எங்கோ பாடுகிறார்கள்.

கேரளத்தின் கள்ளங்கவடு இல்லாத, குழந்தைத் தனமான இயற்கையின் லாவண்யத்திலும் சிருங்கார்த்திலும் ஒர் அரைக்கணம் அவன் சொக்கி மெய்ம்மறந்திருக்கத்தான் வேண்டும்!

இருந்திருந்தாற்போல, என்னவோ அரவம், அரவம் மாதிரி சீறியது.

சபாஷ்!

அந்தப் பெண்தாய் தாய்ப்பெண் இனம் விளங்காத அந்தப் புதிய ஸ்பரிசத்தின் தொட்டுணர்வை இனம் புரிந்து அறிந்து விழிப்புப்பெற்ற தவிப்பில், துடிப்பில், கோபத்தில் தட்டித் தடுமாறியவளாக வாரிச்