உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பூவையின் சிறுகதைகள்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

பூவையின் சிறுகதைகள்


'அதர்மம்' மண்ணைக் கவ்விற்றி!

'மாத்ருபூமி' படபடத்தது; நாட்டின் அமைதியுையம் ஒற்றுமையையும் பராமரிக்க வேண்டுமென்று பிரதமர் இமாசலப்

பிரதேசத்தில் பொதுமக்களை கேட்டுக் கொண்டிருந்தார்!

மலையாளப் பொற்பாவை, இப்போது விதியாகவும், வினையாகவும் சிரிக்கிறாள்!

'ளுங்ளுள் மலையாளியான, ளுங்களிண்டே ஸ்வந்தக் காரியங்கள்லே எடை படண்ட்ட ஆவச்யம் உண்டாக்க நிங்கள் ஆராண...? அந்தப் பேடி, பேடி கொண்டு, குனிந்த தலையை நிமிர்த்தாமல், அவனிடம் 'சோத்தியம் கேட்கிறான்!

அவனைக் கேள்வி கேட்க இவன் யார்? அவனைப்பற்றி இவனுக்கு என்ன தெரியும்? என்ன புரியும்? அவனுக்கு ரத்தம் கொதிக்கிறது; தமிழனாகத் தலை நிமிர்ந்து நின்றான். நிங்கள் ஆராண? விடை சொல்ல வேண்டாமோ...!

'ஞான் ஒரு இந்தியனான அவன் உணர்ச்சிகளின் பிழம்பாகி விம்முகிறான்!

அந்த ரெளடி எங்கே...?

கேரளத்தின் அன்பு பைங்கிளி கண்ணிர்த் தரிசனம் தருகிறாள்! அதோ.. அதோ ....!

எக்ஸ்பிரஸ் ஒடிக்கொண்டிருக்கிறது!

அவனுடைய சட்டைப்பையில் ஊசலாடிய அந்தப் படத்திற்கு அப்போது மூச்சுத் திணறியிருக்க வேண்டும்...!

அது...அது. தாயின் மணிக்கொடி'...