உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பூவையின் சிறுகதைகள்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32

பூவையின் சிறுகதைகள்


விடிந்தால், மகாளய அமாவாசை, புண்ணியகாலம். நவராத்திரி விழா ஆரம்பமாகிவிடும். துதியை திதி, உத்தரட்டாதி நட்சத்திரம் கூடிய சித்தயோகம் சிம்ம லக்கினத்தில் அம்பலக் கூத்தனுக்குக் காப்புக் கட்டி விடுவார்கள் கொலு ஏறி விடுவான் ஆண்டவன், மகர் நோன்பு முடிய நவராத்திரி கொண்டாட்டந்தான்!

ஒதுவாருக்கு இனிமேல நிற்க நிலைக்க நேரம் இருக்காதுதான். இரவு முழுவதும் விழாச்சம்பந்தமான அலுவல்கள் சரியாக இருக்கும். நவராத்திரி நாட்களில் அவதாரங்களுக்கான அலங்காரப் பொருட்கள், அணிமணிகள், பட்டு டைகள், வெள்ளித் தீப வரிசைகள் முதலானவற்றைக் கிட்டங்கியில் உள்ள இருப்புப் பெட்டகத்தினின்றும் பிரித்தெடுக்க வேண்டும். கல்யாணம் காட்சி மாதிரி. தெய்வ காரியங்களிலுங்கூட வேலைகள் சுற்றிச் சுற்றி வரும்; இயல்புதான்.

அந்திப் பொன்னொளி. சிந்துாரக் கனவாகி இயற்கையின் புதிர்மயக்கம் கொண்ட சூனியப் பெருவெலியில் சித்து விளையாடிக் கொண்டிருக்கிறது.

கைப்பிடியில் சிக்கெனப் பற்றியிருந்த காகிதச் சீட்டுக்களை மேலும் ஒரு தடவை உன்னிப்பாகப் பார்வையிட்டார். "அப்பனே! நடராஜப் பெருமானே!" என்று பாசமும் பக்தியும் உருகி வழியத் தமக்குள், தமக்குத்தாமே முணுமுணுத்துக் கொண்டார். கழுத்தில் இழைந்து கிடந்த ருத்திராட்ச மாலையை நெருடிவிட்ட வாக்கில் எதிர்ப்புறத்தில் பார்வையை ஒடவிட்டார் அவர்.

ரங்கன் ஓடி வந்தான். எதற்கெடுத்தாலும் அவனுக்கு ட்டந்தான். மடத்தின் காவலாளி என்றால், பின் சாமானியமா? "ஐயா, மடத்து அடிமைக்காரங்களும் மண்டபப்படிக்காரங்களும் கோயில் பிரகாரப் பந்தலிலே வந்து கூடியிருக்காங்க, உங்களுக்கோசரம் எல்லாரும் காத்துக்கிட்டிருக்காங்க" என்று தகவல் கொடுத்தான் அவன்.

"ஓ, அப்படியா?

£4 لي سياسية ஆமாங்க!

"சாடாப் பேர்களுப் வந்தாச்சா?"

நி1 }x

ஓ!