உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பூவையின் சிறுகதைகள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை எஸ். ஆறுமுகம்

17



தண்ணிர்க்குவளை காலி.

"கச்சப் பொடிக் குழம்புக்கு உப்பு திட்டம்தானுங்களே, மச்சான்காரவுகளே."

"ஓ! உப்பு பத்தாட்டி நான் ஒன்னை விட்டிருப்பேனா?”

"ஒங்களை மாதிரிதான் ஒங்க தலைச்சன் வீரமணிப் பயலும்!"

$$.

பலே! பலே!"

கடைக்குட்டி வாண்டு கரவொலி எழுப்புகிறான். நாளைய காந்தி விழாவை அமர்க்களப்படுத்த இவன் ஒருவனே போதும்!

அப்போது -

திட்டிவாசல் வெளியில், சைக்கிள் மணிச் சத்தம் கேட்கிறது.

"வெரசாய்ப் போய்ப் பாரேன், முக்காலும் நம்ப ராசாவாத்தான் இருக்கோணும்; இப்பவே, நம்ப செல்வம் வீரமணியோட மனசையும் கண்டு தண்டிக்கினு, அவனோட கண்ணாலத்தை இந்த ஐப்பசிக் கடுத்தத்திலேயே நடத்திப்பிடலாம்; அப்பவே, புது வீட்டுக்கும் குடி புகுந்திடலாம்! ம்... சல்தியா ஒடுடி, புள்ளே!"

இருட்கன்னி நெற்றியில் இட்டுக் கொண்டிருப்பது இரத்தத் திலகமா, என்ன?

"மகனே, வீரமணி"

அங்காளம்மை பெற்ற பாசம் துடிதுடிக்கக் கதறுகிறாள். வீரமணியின் முகம் ரத்த விளாராக இருந்தது!

3

அங்காளம்மை, தன் மகனின் முகத்தைப் பார்த்து அரற்றினாள்.

"என்னப்பா நடந்திச்சு? நானும் ஒன் ஆத்தாளும் தொட்டுத் தொட்டு அழகு பார்த்து, மாறி மாறி முத்தம் கொடுத்து ஆனந்தமடைஞ்ச உன் கன்னங்க ரெண்டிலேயும் ரத்தம் பீறிடுதே? - யாரப்பா உன்னை இப்படி ஈவு இல்லாம, இரக்கம் இல்லாம அடிச்சுப் போட்டது? ... ஊம், சொல்லு வீரமணி, சொல்லு"- மூர்த்தண்யமாகப் பெற்ற பாசம் சீற முழங்கினார் சேரிச் சாம்பான். கண்கள், மிளகாய்ப் பழங்களாகச் சிவந்தன; சுடுசரம் சுடுகிறது; வழிகிறது.