பக்கம்:கரிப்பு மணிகள்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தை, மெய்ப்புப்பார்க்க தேவையில்லை

160’ கரிப்பு மணிகள் அவன் பிரமித்துப் போனாற் போல் உட்கார்ந்திருக் கிறான். ‘ஏன்ல...? கலியாணம் கட்டியிருக்கியா?” ‘இல்ல...” ‘ஏ? ஒரு தங்கச்சி இருந்து அதும் செத்திட்டுன்னு சொன்னாவ. பெர்றவு ஒ ஆத்தாக்குத்தா ஆரிருக்கா! காலத்துல'ஒரு கலியாணம் ச்ெட்டன்டாமா?” அப்போது பொன்னாச்சி வட்டக் கொப்பியில் கருப் பட்டிக் காபி எடுத்து வருகிறாள். செங்கமலம் அதை வாங்கி அவன் முன் வைக்கிறாள். “குடிச்சிக்கவே...” - i. - அவன் அதைப் பருகுகையில் பொன்னாச்சி வாயிற்படிக் கருகில் நின்று அவனைப் பார்க்கிறாள். மாலை குறுகும் அந்த நேரத்தில் அவளை மின்னற்கொடியே தழுவியிருப்பது போல் தோன்றுகிறது. * ‘வெத்தில போடுவியால? போடுறதில்ல...’ ‘உங்கய்யா வெத்தில இல்லாம ஒரு நேரம் இருக்க மாட்டா. அவள் காம்பைக் கிழித்துச் கண்ணாம்பைத் தடவிக் கொண்டு உதிர்க்கும் அந்தச் சொற்களில்...போகிற போக்கில் மருமங்கள் பற்களைத் திறந்து உட்புறம் காட்டி னாற்போல் அவன் குலுங்கிக் கொள்கிறான். அவன் ஏதும் வாய் திறக்குமுன் பேச்சு மாறி விடுகிறது.

இப்ப ஆட்டுக்குத்தாம் போறியா? கொடைக்கிப் போவலியா?” o

“நம்ம கொட இப்ப பெரிசாயிருக்கு. மூணாந்தெருவில எதோ வூடிருக்குன்னாவ. வித்துமூடைத் தரகனார் வெள்ளச் சாமியிருக்காரில்ல: அவெ சொன்னா. இப்படி வாரப்ப, இந்தத் தெருவளவுல இந்தப்புள்ள இருக்கறதாச் சொன்ன நெனப்பு வந்தது. நொழஞ்ச...’ ‘ஒங்கக்கு ரொம்ப் சிநேவம் போலிருக்கு...” அவன் மனம் மலர்ந்து சிரிப்பு பொங்குகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கரிப்பு_மணிகள்.pdf/18&oldid=657359" இலிருந்து மீள்விக்கப்பட்டது