84. o - முருகன் காட்சி
எனத் தொடங்கும் பாடலையும், போரெதிர்தேற்றார் எனத் தொடங்கும் பாடலையும் பாடியவர் ஆவர். ‘கார்மலி கதழ் பெயல்’ என்ற பாடலைக் கேசவனார் பாடியுள்ளார். நல்லழுசியார் தேம்படு மலர்குழை’ என்னும் பாடலைப் பாடியவர் ஆவர். நப்பண்ணனார் நிலவரையழுவத்தான்’ எனத் தொடங்கும் பாடலையும், நல்லச்சுதனார் “ஊர்ந்ததை’ எனத் தொடங்கும் பாடலையும் பாடி யுள்ளனர். ஆக ஏழு புலவர்கள் பாடிய இவ்வெட்டுப் பாடல் களும் செவ்வேளைப் பற்றியனவாகும். இப்பாடல்கள் செவ்வேள் விரும்பியுறையும் திருப்பரங் குன்றத்தைப் பற்றியும் சிறப்பாகக் குறிக்கின்றன. முருகன் செந்நிறம் கொண்டவன். எனவே செவ்வேள் என்றும் சேயோன் என்றும் வழங்கப்படுகின்றான். அடுத்து, வேள் என்ற சொல் விருப்பத்தைச் செய்கின்றவன். அல்லது விருப்பத்தைக் கொடுக்கின்றவன் என இருவகையிலும் பொருள் தரும், சங்க இலக்கியங்களில் முருகன் செவ்வேள் என்றும், விறல் வேள் என்றும் வெல்வேள் என்றும், நெடுவேள் என்றும், செய்யோன் என்றும் பல பெயர்களால் அழைக்கப்படு கின்றான்.
செவ்வேள் என்ற சொல் வழக்கு முருகனைக் குறிக்கும் என்பதனை,
மூவிரு கயங்தலை முங் நான்கு முழவுத்தோள் ஞாயிற்றேர் நிறத்தகை நளினத்துப் பிறவியை காஅய் கடவுள் சேஎய் செவ்வேள்
-பரிபாடல் : 5 , 11.3 என வரும் பகுதியானும்,
ஈவாரைக் கொண்டாடி யேற்பாரைப் பார்த்துவக்குஞ் சேய்மாடக் கூடலும் செவ்வேள் பரங்குன்றும்
-பரிபாடல் திரட்டு : 11 1.2.
என்ற பகுதியானும் அறியலாம். சிலப்பதிகாரமும்,