உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பட்டினத்தடிகள்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

viii பட்டினத்தார் தமிழ்நாட்டைத் தாண்டியவராகத் தெரிய வில்லை. காரைக்குடிக்கு ஆறு கல் அளவுத் தொலைவில் உள்ள உஞ்சனை வடநாட்டு உஞ்சையை நினைவு கொள்ள எழுந்த தலம். கல்வெட்டுகள் இதனை உஞ்சேனை என்கின் றன. நம் பத்திரகிரியார இந்த உஞ்சனையைச் சேர்ந்தவரா? பத்தாம் நூற்றாண்டுப் பட்டினத்தார் திருவெண்காட்டாராயி ருக்க வாய்ப்பில்லை. திருவெண்காட்டார் நகரத்தார் வாழ்வுப் பகுதியில் உள்ள உஞ்சேனையைக் கருத்தில் வைக்கவும் வாய்ப்பில்லை. பத்திரகிரியார் தமிழ்நாட்டவராகவேயிருந்து 'புலம்பல்' என்ற அருந்தமிழ் மாலை பாடியிருத்தல் வேண்டும். பேராசிரி யர் சுப்புரெட்டியார் அவர்கள் இந்தச் சிக்கலில் மாட்டிக் கொள்ள விரும்பவில்லை. அவர்கள் பட்டினத்தாரின் கருத்துக் களிலேயே கவனம் செலுத்த விரும்பகிறார். பதினெராந் திருமுறைப் பனுவல்களில் தோய்ந்து அழ கிய பகுதிகளை எடுத்து விளக்குவது மிக அருமையாக இருக்கிறது. அதனுள்ளும் கோயில் நான்மணி மாலையில் ● 等号 爱曾哈 சராசரம் அனைத்தும் நின்னிடைத் தோன்றி நின்னிடை அடங்கும் நீ ஒன்றினும் தோன்றாய் ஒன்றினும் அடங்காய்.... என்னும் பாட்டு அடிகட்கு முதற்காரணமும் நிமித்த காரண மும் முதல்வனே என்று கொள்ளும் விசிட்டாத்துவைத சிவாத் துவைதக் கொள்கைப்படி மயங்கிப் பொருள் கொள்ளலாகாது என்று காட்டி, சைவ சித்தாந்தக் கொள்கைப்படி விளக்கம் கொடுத்துள்ள பேராசிரியர் ரெட்டியார் அவர்களின் புலமை நலம் பாராட்டத்தக்கது. பேராசிரியர் ரெட்டியார் அவர்கள் பட்டினத்தடிகளார் பெண்பாலர்பால் வெறுப்புக் கொண்டு பேசிய இடங்களைக் காட்டி, "ஆயின் ஆண்பாலார் அல்லரோ தவறிழைப்பவர். பெண்பாலரை இத்துணை இழித்துப் பேசலாமா?' என்று கேட்டு நம்மைச் சிந்திக்க வைக்கிறார்.