உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பட்டினத்தடிகள்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

+ 8 + பட்டினத்தடிகள் மருதவாணரைக் காணாத திருவெண்காடர் அவர் தந்த பெட்டியைப் பெற்று அதனைத் திறந்து பார்க்க, அதிலுள்ள காதற்ற ஊசியும் நூலும் கண்ணில் பட, அந்தக் கணமே அவரிடத்தில் பரஞானம் விளங்கப் பெறுகின்றது. வீடு, மனைவி முதலிய அனைத்தையும் துறந்தார். இவரிடம் அமைச்சராயிருந்த சேந்தனார் எவ் வளவோ சொல்லியும் பயன்படவில்லை; அவை விழ லுக்கு இறைத்த நீர்போலாயிற்று. இங்ங்ணம் துறந்த கோவணாண்டியான பட்டினத்தார் சுடுகாட்டில் சாம்பர் குவியலின்மீது அமர்ந்திருக்க, அந்நாட்டரசன் இவரைக் கண்டு பணிந்து, 'இத்துறவடைந்து நீர் பெற்றது என்று வினவ, இவர் 'நீ நிற்க யாம் இருக்க’’ என்று எளிதாக மறுமொழி பகன்றார். இந்நிலையில் சேந்தனார் வந்து வணங்கி தமக்கு என்ன கட்டளை என்று வினவ, அடிகள் 'உம் மனம்போல் செய்க என்று மறு மொழி கூறினார். பின்னர் இவர் பல இடங்களில் பிச்சையேற்று உண்டு வரும் நாளில் இவர் செயல் தங்களுக்கு அவமா னம் தருவதாகக் கருதிய உறவினர்கள், நஞ்சூட்டிய நெய்யப்பம் ஒன்றை இவர் தமக்கை மூலம் உண்ணக் கொடுத்தனர். உண்மையை உணர்ந்த அடிகள் 'தன் வினை தன்னைச் சுடும்; ஒட்டப்பம் வீட்டைச் சுடும்’ என்று சொல்லி அதனைக் கூரையில் செருகவே, வீடும் ஊரும் தீப்பற்றி எரிந்து சாம்பலாயின. சில நாட்கள் உருண்டோடின. ஒருநாள் இவர் அன்னையார் காலமானபோது இவர் அவண் போந்து அவர்தம் திருமேனியை மயானத்தில் கிடத்தித் தம்பாட லாலேயே உடல் தகனம் ஆகும்படி செய்தார். பின்னர் அங்குப் பலருக்கு உபதேசம் செய்து, சில காலம் அங்கு இருந்துவிட்டுத் திருவிடைமருதுரர் அடைந்தார். அங்கு சிவபெருமானே தம் நீர் விடாய்க்கு நீர் கொணர்ந்து வந்து தரப்பெற்றார். அப்பெருமான் திருவடி தம் மார்