உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பட்டினத்தடிகள்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல் - 4 முதற் பட்டினத்தார் - படைப்புகள் முதற் பட்டினத்தார் நம்பியாண்டார் நம்பியால் குறிப்பிடப் பெற்றவர். நம்பிகளின் காலம் பத்தாம் நூற்றாண்டின் இறுதி. இவர் பாடியனவாகவுள்ளவை ஐந்து பிரபந்தங்கள். அவை: . கோயில் நான்மணிமாலை திருக்கழுமல மும்மணிக் கோவை . திருவிடைமருதுர் மும்மணிக் கோவை திரு.ஏகம்பமுடையார் திருவந்தாதி திருஒற்றியூர் ஒருபா ஒருபஃது என்பனவாகும். இந்நூல்கள் சொல்லழகும் பொருட்சு வையும் நிரம்பி பக்திச் சுவை நன சொட்டும் பாங்கில் சைவ சாத்திர விளக்கங்களைக் கொண்டு அடியார்களும் புலவர்களும் போற்றுகின்ற இலக்கியங்களாகத் திகழ் கின்றன. இவை பதினோராந் திருமுறையில் நம்பிகளால் தொகுக்கப் பெற்றுள்ளன.

இப்பிரபந்தங்களில் இப்பட்டினத்தார் வரகுண பாண்டியனைக் குறிப்பிடுகின்றார். இப்பாண்டியன் காலம் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு ஆகும். ஆதலால் இப்பட்டினத்தார் 9ஆம் நூற்றாண்டுக்குப் பின்னும் நம்பியாண்டாரின் காலமாகிய 10ஆம் நூற்றாண்டின் இறுதிக்கு முன்னும், அதாவது 10ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்தவராகக் கொள்ள வேண்டியவரா கின்றார். இனி, இப்பிரபந்தங்களை ஒவ்வொன்றாக ஆழ்ந்து நோக்குவோம்; பாடல்களிலும் ஆழங்கால் பட்டு அநுப விப்போம். பக்திச் சுவையிலும் மூழ்க முயல்வோம்.