உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பட்டினத்தடிகள்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ix பட்டினத்தடிகள் காலந்தொடங்கி இப்போக்கு சைவத் தமிழிலக்கியத்தில் மிகுதியாகவே காணக் கிடக்கிறது. பட்டி னத்தடிகள், தாயுமானவர், அருணகிரியார், இராமலிங்கர், குணங்குடியார் இவர்களும் இப்போக்கைக் கடைப்பிடிக்கின்ற னர். பிறர் குறைகளையும், குற்றங்களையும் தம்மேல் இட்டுக் கொண்டு நீல நினைந்திரங்கலாக அவர்தம் பாடல்கள் விளங் கக் காண்கிறோம். இராமகிருஷ்ண பரமஹம்ஸர் எப்போதுமே காமினி காஞ்சனம் (பெண் - பொன்) வெறுத்து இருக்க வேண்டும் என்று ஓயாது அறிவுறுத்தி வந்தனர். ஆண்களெல்லாம கற்புவிட்டுத் தவறு செய்தால் அழகான பெண்மை நலம் அழிந்திடாதோ என்று பேசினார் பாரதியார். இது அந்த அருளாளர்க்குப் புரிந்திராத ஒன்று அன்று. மனிதன் பெரிதுஞ் சறுக்குவது இன்பத்துறையில்தான். திருநீலகண்டர் பத்தராயிருந்தும் இன்பத் துறையில் எளியரா யிருந்தார். அவரைத் தெளிவாக்கவே இறைவன் திருவோட் டுத் திருவிளையாடல் நிகழ்த்தினான். எண்பதாண்டு கடந்த அப்பருக்குப் பெண் பொன் தேர்வு வைத்து அவர் உள்ளத்துறு தியை மற்றையோருக்குத் தெரியக் காட்டினான் சிவபெரு { {}በ፻፴፬ . காமமும் பசியும் யானை முதலா எறும்பிறாகவுள்ள யோனி ப்ேதம் அத்தனைக்கும் உள்ள உணர்வுகளில் காமம் உயிர்த்தொகுதி இடையறவு படாமல் காக்கும் உணர்வு; பசியோ உடலில் உயிர் நீட்டித்தலைச் செய்வது. விலங்கு முதலிய அஃறிணைகளுக்கு இவ்விரண்டும் உணர்வுகளாகவே இன்றளவும் நீடிக்கின்றன. மனிதன் காமம், பசி இரண்டிற்கும் நிறைவு காண்பதைக் கலையாகவே வளர்ந் திருக்கிறான். இரண்டையும் துய்ப்பதில் வரையறை இல்லாதவ னாக இருப்பதே பல சமுதாயச் சிக்கங்களுக்கும் தோற்றுவாய் செய்து விட்டது.