உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பட்டினத்தடிகள்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 26 % பட்டினத்தடிகள் இறைவனை நினைந்து வழிபடாது தமது வயிறு வளர்த்தற் பொருட்டுப் பிற உயிர்கட்குத் தீங்கு செய்து வாழ்வோர் உலக நிலையாமையைச் சிறிதும் உணராத வர்களாவர். இதனை விளக்கும் போக்கில், நஞ்சுமிழ் பருவாய் வெஞ்சின் மாசுணம் தன்முதல் முருக்க நென்முதல் சூழ்ந்த நீர்ச்சிறு பாம்புதன் வாங்ககெதிர் வந்த தேரையை வவ்வி யாங்கி யாம்முன் கருவிடை வந்த ஒருநாள் தொடங்கி மறவர் மறலி முறைபிறழ் பேழ்வாய் அயில்தலை அன்ன வயிற்றிடைக் கிடந்தாங்கு அருள்நளிை இன்றி ஒருவயிறு ஓம்பற்குப் பல்லுயிர் செகுத்து வல்லிதின் அருந்தி அயர்த்தனம் இருந்தும் போலும் பெயர்த்துநின்று எண்தோள் வீசிக் கண்டோர் உருகத் தொல்எயில் உடுத்த தில்லை மூதூர் ஆடும் அம்பலக் கூத்தனைப் பாடுதல் பரவுதல் பணிதலே இலமே (8) நஞ்சு உமிழ் பெருநாகம் ஒன்றின் வாயில் சிக்கிய நிலையில் உள்ளது ஒரு நீர்ப்பாம்பு. இந்நீர்ப் பாம்பு தன் வாய்க்கெதிரில் வந்த தவளையைக் கவ்வுகின்றது. இந்நிலையை ஒத்துள்ளது நம் நிலை. நாம் அன்னை யின் கருவினின்று வெளிப்பட்ட நாள் தொட்டு கூற்றுவ னது வாயில் அகப்பட்டுக் கிடக்கின்றோம். இந்நிலை யில் நாம் பிற உயிர்களைக் கொன்று தின்று வயிறு வளர்த்து வருகின்றோம். நிலையாமையை மறந்து தில்லை மூதூரில் ஒரு காலை ஊன்றி மற்றொரு காலைத் தூக்கி நின்று எட்டுத் தோள்களையும் வீசி நின்று காண்போர் மனம் கசிந்துருகத் திருநடனம் புரியும் ஆடலரசனை வாயாற பாடுதலும், மனத்தாற் பரவுத லும், மெய்யாற் பணிதலுமாகிய இத்திருப்பணிகளுள் ஒன்றையும் செய்திலோம் என்று உலக மக்களின்