பக்கம்:கோடுகளும் கோலங்களும்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராஜம் கிருஷ்ணன்

135


நிறுத்தி அறைக் கதவைப் பூட்டுகிறார். பிறகு இருவரும் நடக்கிறார்கள்.

“ஐயா, உங்க கிட்ட ... எப்படி கேக்கிறதுன்னு தெரியல. ஆனா என்னமோ ஒண்ணு கேக்கலாம்னு தயிரியம் சொல்லுது. பாங்க்காரரு கடன் குடுக்க மாட்டே. வூட்டுக்காரரு கையெழுத்துப் போடணுங்கறாரு.. ஆனா எனக்குள்ள ஒரு காக்காணினாலும் இங்கே போடணும்ன்னு இருக்கு. நீங்க ஒரு உதவி மட்டும் செஞ்சா...”

“சொல்லுங்க செவுந்திம்மா...”

“எனக்கு ஓராயிரம் ரூபா கடனா குடுத்து உதவி செய்யணும். நா நிச்சியமா உழச்சி, முதலெடுத்து உங்கக் கடன எம்புட்டு வட்டி போடுறீங்களோ, அப்படிக் குடுத்திடறேன்...” .

வானில் இருள் பரவி நட்சத்திரங்கள் பூத்து விட்டன.

அவளுக்கு அவள் குரல் அந்நியமாகத் தெரிகிறது.

“செவுந்தியம்மா, வெள்ளிக் கிழம நா வார, உங்க வூட்டுக்கு. வூடு எங்க சொன்னீங்க?”

“கீழத் தெரு கோடி வூடு. அடுத்து ஒரு குட்டிச் சுவரு. எட்டினாப்புல சாவடி, இருக்கும்...”

“சரி. இப்ப வூட்டுக்கு வந்து ஒரு வா காபி சாப்பிட்டுப் போங்க.”

“இருட்டிப் போச்சையா...”

“பரவாயில்ல. ரோட்டு வர கொண்டாந்து வுடுறே!”

அவர்கள் நடக்கிறார்கள்.

15


“அப்பா, நீங்க வந்து கைவச்சதே பெரிய சந்தோசம். பாருங்க வேத்து வுடுது. போயி உக்காந்துக்குங்க. வேல்ச்சாமி, ஏரப் புடியப்பா...” என்று அப்பா கையை விடுவித்துக்