உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலக்கிய அமுதம்.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முகவுரை

" இலக்கிய அமுதம்" என்னும் பெயர்கொண்ட இந்நூலுள் புறநானூறு, அகநானூறு, திருக் குறள் போன்ற இலக்கியங்களில் காணப்படும் அறிய செய்திகள் கட்டுரை வடிவில் தரப்பட் டுள்ளன. இலக்கியத்தோடு தொடர்புடைய வர லாற்று செய்திகளும், கல்வெட்டு செய்திகளும் சில கட்டுரைகளில் இடம்பெற்றுள்ளன. இலக்கியங்கள் கற்பாருக்கு இக்கட்டுரைகள் முதற்படியில் நின்று துணைபுரியத்தக்கவை. தமிழார்வம் மிக்கவருக்கு இந் நூல் இலக்கியத்துறையில் முதல் விருந்தாகும் என்று நம்புகிறேன்.

தியாகராசர் கல்லூரி

மதுரை மா. இராசமாணிக்கனர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_அமுதம்.pdf/4&oldid=640662" இலிருந்து மீள்விக்கப்பட்டது