இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
xiii
அருள்சே ருளத்தின் ஆழ்வார்கள்
அருளிச் செயலில் உளந்தோய்ந்தே ஆய்வின் திறத்தால் முனைவர்பட்டம்
அளிக்கப் பெற்றான் அறிவியலின் பொருள்சேர் கலைகள் தமிழ்மொழியிற்
பொலிந்து விளங்க மொழிபெயர்த்தே புதிய நூல்கள் பலவியற்றிப்
புலமைப் பணிசெய் புகழாளன்.
15. மக்கள் வாழ உலகியல் நூல்
மட்டும் போதா வென்றுணர்ந்து மன்னு தமிழில் முன்னோர் செய்
அருள்நூல் வழக்கும் வேண்டுமெனத் தக்க வகையில் ஆழ்வர்கள்
அருளிச் செயலின் தகையுணர்ந்தே தலத்தின் பெருமை நனிவிளங்க
நூல்செய் தளித்த தாளாளன். நக்கன் அருள்சேர் நாயன்மார்
நவிலும் திருப்பாட் டருள் நலத்தை நாடுமகிழ விரித்து ரைக்கும்.
நல்ல பணியுஞ் செய்வனென மிக்க நாவுக் கரசர்தமிழ்
வீறு விளங்க நூல்செய்தான் மேன்மை திகழும் சுப்புரெட்டி
யெனும்சேர் பெற்ற வித்தகனே.