54
மாணவர்களுக்குப் புறநானுற்றச் சிறுகதைகள்
"மறுக்காதே மன்னா. இன்று இரவோடே தேர் பூட்டிச் செல், துன்புறும் உன் மனைவியின் கண்ணிரைத் துடை! அவ்வரத்தையே யாம் வேண்டினோம்... மறுக்காமல் தந்தருள்க” பேகனுக்குப் பரணர் விடுத்த வேண்டுகோள் இது.
பெரிய பொன் தட்டு. அதில் முத்துக்களும் நவமணிகளும் வகை வகையான ஆபரணங்களும் அடுக்கிவைக்கப் பட்டிருக்கின்றன. பேகன் அத்தட்டை எடுக்கிறான். புலவர் கையில் கொடுக்கிறான். புலவர் அரசில் கிழார் அதனை ஏற்க மறுக்கிறார்.
“பேகனே அளவிலாத செல்வம் அளிக்கிறாய். அது எனக்கு வேண்டாம்”
“புலவரே, தயங்க வேண்டாம் வேண்டியதைக் கேளுங்கள்.”
“மன்னவரே நான் விரும்பும் பரிசில் இது. உன் மனைவிக்கு நீ அருள்காட்டவில்லை. வாடி வதங்கிவிட்டாள். அவள் கூந்தலில் மறுபடியும் நறும் புகை ஊட்டுக. மலர் சூட்டுக. அவள் வருத்தம் தீர்க்க வேண்டி நேரில் குதிரையைப் பூட்டுக. நான் வேண்டும் ஒரே பரிசில் இதுதான்.”
இளஞ்சேட் சென்னி ஆற்றல் மிகுந்த அரசன். தென்பாதவரைத் தோற்கடித்தான். வட வடுகரைவாட்டி ஒட்டினான்.