உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சித்தர்களின் பூசா விதிகள்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



பூசா விதிகளுக்கு ஒரு முன்னோட்டம்.

செங்கதிர் உதிப்பதற்கு இரண்டு மணிக்கு முன் எழுந்து கைகால் தூய்மை செய்து கொண்டு வெண்ணீறணிந்து இறைவனைத் தியானிக்க, பின்னர் அவசிய கருமங்கள், பல் துலக்குதல் நீராடல் என்பவைகளைச் செய்து தோய்த்துலர்ந்துள்ள ஆடை அணிந்து திருநீற்றினை உத்துளனமாக அணிந்து கொள்க. அநுட்டான பாத்திரத்தை இரண்டு முறை அத்திர மந்திரத்தால் கழுவிச் சுத்தி செய்து இருதைய மந்திரத்தால் சுத்த சலம் பூரித்துத் தூய்மையான இடத்தில் சிறிது சலம் விட்டு அதன் மேல் பாத்திரத்தை வைத்து ஆசனத்திலிருந்து அநுட்டானம் பண்ணுக. குமிழி நுரை புழு முதலியவையில்லாது புனிதமுள்ள சலக்கரை யிலிருந்தும் அநுட்டானம் பண்ணலாம். போக காமிகள் கிழக்கு முகமாகவும் மோட்சகாமிகள் வடக்கு முகமாகவும் அமர்ந்து அநுட்டானம் பண்ணுக.

நிலத்துய்மை

தாமிருக்கும் நிலத்தை 'ஓம் அத்திராயபட்' என்று சலத்தினாலே புரோட்சிக்க. இதுவே நில சுத்தியாம்.

கணபதி, குரு வணக்கம்

இருகை நடுவிரல் மூன்றையும் உள்ளே மடக்கி மற்றை விரல்களை நிமிர்த்துச்சிகாய முத்திரைக் கொண்டு