உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கழுதை அழுத கதை.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஈடுபடுத்தம், - திருத்தமான மொழி நடையறிவிப்பு, - சொல்லுக்குரிய நேரிய பொருளையுணர்ந்து பழக்கப் படுத்திக் கொள்வதற்கான அறிவுத் தோய்விப்பு - எனப் பலபடிகளான ஊக்கங்களை உள்ளோட்டமாக இப் பாவியத்துள் நம் ஐயா அவர்கள் அமைத்துத் தந்திருக்கும் பாங்கு - இப் படைப்பை நோக்கி வணங்குதற்குரிய உணர்வையே நம் உள்ளத்துள் உந்துகின்றது!..

மிகப் பல இடங்களில் - அவரே நேரில் நம்மிடம் உரையாடுவதுபோன்ற பான்மையினையே நாம் காண வியல்கின்றது!

ஆக்கத்துள் நோக்குங்கள் .

இக் கதைப் பாவியக் கடலின் கரையோரத்தில், நாம் நம்மின் உள்ளக் கால்களைப் பதித்துநிற்கையில் - அத் தூய நெஞ்சத்தவரின் நேய நினைவலைகளால் சிலிர்சிலிர்ப் புறும் நிலையிலாக - அவை ஈர்க்கப் பெறுகின்றமை போன்ற தன்னுணர்வே நமக்கு ஏற்படுகின்றது! அலைக ளைக் கடந்து இக் கடலில் நீந்துகையில்-இதனகப் பட்ட அமைதியுள் நாமும் ஒன்றிநின்று உள்ளுவகையில் உலாவலுற மிதக்கின்றோம்! இனிமேல், நீங்களும் படியுங்கள் - மிதக்கலாம். மிதவுங்கள் - பறக்கலாம்! பறவுங்கள் - உயரலாம். உயருங்கள்-உவக்கலாம்! நம் உயர்வுக்காகவும் உவப்புக்காகவும் - நம் ஐயா அவர்கள் நமக்கெனத் தந்துசென்ற ஆக்கங்களில், இதுவும் ஒன்று!.

நம் ஆக்கமே - அவரின் நோக்கமாக இருந்தது. இனி, நம் நோக்கமோ, - இவ் ஆக்கத்துள் ஆகட்டும். தஞ்சாவூர் -- 5 அன்பு, 20.6'99 ப. அருளி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுதை_அழுத_கதை.pdf/41&oldid=665378" இலிருந்து மீள்விக்கப்பட்டது