பக்கம்:திருக்குறள் தெளிவு.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இல்லறவியல் 37 13. அடக்கம் உடைமை அடக்கம் தேவருள் ஒருவனாக்கி உயர்த்தும்; அடக்கம் இல்லாமை கொடிய இருளனைய தீ நெறியில் திருப்பி விடும். 121 அடக்கத்தை உயர் பொருளாக மதித்துக் காக்க வேண்டும்; அவ்வடக்கத்தினும் சிறந்த ஆக்கப் பொருள் உயிர்க்கு வேறில்லை. - 122 அடங்குதலே அறிவுடைமை என்பதறிந்து நன்முறையில் அடங்கி ஒழுகின், அவ்வடக்கத்தின் திண்மை அனைவராலும் அறியப்பட்டுச் சிறப்பளிக்கும். 123 உறுதியில் தளராது அடங்கியொழுகுபவனது தோற்றப் பொலிவு உயர்ந்த மலையினும் மிகப் பெரிதாம். 124 பணிவுடைமை பொதுவாக மக்கள் எல்லார்க்குமே நல்லதாம் எல்லாருள்ளும் சிறப்பாகச் செல்வர்க்கே செல்வத் தகுதியை உரித்தாக்க வல்லது. 125 உறுப்புக்களை உள்ளடக்கும் ஆமை போல் ஐம்பொறி இன்பங்களையும் ஒரு பிறவியில் அடக்கினாலேயே அவ்வடக்கம் ஏழு பிறவிகளிலும் காப்பளிக்கும். 126 எவற்றைக் காக்காதுவிடினும் நாக்கையாவது அடக்கிக் காப்பாராக அங்ங்னம் காக்காராயின் சொற் குற்றத்தில் அகப்பட்டுத் துன்பப்படுவர். 127 பேசும்போது சொல்லடக்கம் இன்மையால் ஒரு சொல்லாலாயினும் தீய சொற் பொருளாம் தீப்பயன் உண்டானால், முழுப் பேச்சுமே கெட்டதாகி விடும். 128 நெருப்பால் சுட்ட காயம் உள்ளே ஆறிவிடும்; ஆனால் நாக்கு சொல்லால் வைதுசுட்ட மனப்புண்ணோ என்றுமே ஆறவே ஆறாது. - 129 சினத்தைத் தடுத்துக் காத்து நன்னூற்களைக் கற்று அடங்கி யொழுக வல்லவனது நற்காலத்தை அறக் கடவுள் உரிய வழியில் புகுந்து உற்று நோக்கி யிருக்கும். 13 O