138 இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும் படுத்துகிறது. வினையை விதைத்தவன் வினையையே அறுக்க வேண்டும் என்பதை இராவணன் உணர்ந்தே செயலற்றவனாய் இருந்தான். இவ்வாறு தன்னைத் தானே தண்டித்துக்கொள்ளும் பெருந்தகைமை பேரறி வாளருக்கே பொருந்தும். இப்பண்பையே 'தன்னிரக்கம்' என மேனாட்டார் கூறுகின்றனர். இராவணனுடைய இப்பண்பை நாம் நன்குணர வேண்டுமென்றே கவிஞன் விரும்பியிருக்கின்றான். இராவணன் சீதையை எடுத்து வரத் தீர்மானித்த பொழுது, ஒருவரையும் கலந்தாலோசிக்கவில்லை; தங்கையின் துரண்டுதலால் தான் செய்ய முற்பட்ட காரியத்தை அதை முடிக்க தனக்கு உதவியாக இருக்க வேண்டிய தன் மாமன் மாரீசனிடம் மட்டுமே தெரிவிக்கிறான். உண்மை இங்ங்ணமிருக்க, சேனாதிபதியைத் தான் முன்னரே சீதையை எடுத்து வர வேண்டா என்று சொன்னதாகவும், அதைக் கேட்காமல் இராவணன் தீமையைத் தேடிக்கொண்ட தாகவும் கூறவைத்து, அவைகளை இராவணன் மறுத்துக் கூறாமலும் இருக்கும்படி கவிஞன் செய்திருப்பது, இராவணனுடைய மேன்மையை நாம் அறிவேண்டுமென்றே. சேனாதிபதி தன்னை இவ்வாறு பழிப்பதற்குக் காரணம் இல்லை என்பதை உணர்ந் திருந்தவனேயானாலும், இராவணன் தான் செய்த பிழையையே அவன் சுட்டிக் கூறுகிறான் என்ற காரணத்தால், அவனை அடக்காமல் இருக்கிறான். இச்செயல் தன் பிழையின் பொறுப்பை ஏற்றுக் கொள்ள இராவணன் பின்னடையவில்லை என்பதையே வற்புறுத்துகிறது. - இராவணனைப்போலத் தங்களைத் தாங்களே நொந்து கொள்ளும் இயல்புடைய மனிதர்கள், செயல்
பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/155
Appearance