ல்லறவியல் 21 5. இல்லற (குடும்ப) வாழ்க்கை குடும்பத்தான் எனப்படுபவன், இயற்கையாக உரிமையுடைய பெற்றோர், மனைவி, மக்கள் ஆகிய முவகையார்க்கும் நன்முறையில் நிற்கும் துணை. 41 துறவியர்க்கும் ஒன்றும் துய்க்கவியலாத எளியோர்க்கும் ஆதரவின்றி இறந்து போனவர்க்கும் இல்லறத்தான் தக்க jöᎧᏈᎢ . 42 தென்புலத்தில் இருப்பதாகக் கூறப்படும் முன்னோர்கள், தய்வம், விருந்தினர், சுற்றத்தார், தான் என்னும் ஆந்திறத்தாரையும் நெறிமுறைப்படிப் போற்றுதல் தலையாய L60s. 4 o' இல்வாழ்க்கை பழிக்கு அஞ்சிப் பலர்க்கும் பங்கிட்டு உண்ணுதலை உடையதாயின், அந் நல்வாழ்க்கையின் தாடர்ச்சி என்றும் அறுவதில்லை. 4 4 இல்வாழ்க்கை அன்பும் அறமும் உடையதாய்த் நிகழ்ந்தால், அஃதே இல்வாழ்க்கையின் இலக்கணமும் ன்மையும் ஆகும். 45 அறவழியில் இல்லறம் நடத்தி வந்தால், அதனினும் சிறவழியில் சென்று பெறத்தக்க நன்மை வேறு யாது. 46 இயல்பான ஒழுக்க முறையுடன் குடும்ப வாழ்க்கை டத்துபவன், வேறு நன்மை பெற முயல்பவர்களுக்குள் ால்லாம் முதன்மையானவன். 47 பிறரையும் நல் வழியில் நடக்கச் செய்து தானும் அறம் வறாது நடத்தும் இல்வாழ்க்கை, தவஞ்செய்வார் வலிமையினும் மிக்க தவவலிமை உடையதாம். 48 அறநெறி என்று சொல்லப்படுவதே இல்வாழ்க்கை யொன்றுதான்! அவ்வாழ்க்கையும் மற்றொருவன் பழிக்க இடமில்லாததாயின் மிக நல்லது. 49 உலகில் வாழ வேண்டிய முறைப்படி இல்வாழ்க்கை நடத்துபவன் விண்ணில் இருக்கும் தெய்வங்களுள் ஒரு தெய்வம் போல் மதிக்கப்படுவான். 5 O
பக்கம்:திருக்குறள் தெளிவு.pdf/23
Appearance