இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
மாணவர்களிடையே படிக்கும் வழக்கத்தை வளர்த்தல் 87 அறிவு, பண்பு என்ற இரண்டும், அதாவது, மூளையும் நெஞ்சும் நன்கு வளர்ச்சியடைய வேண்டும். நெஞ்சின் வளர்ச்சியாகிய பண்பாட்டுக்குக் கலையியல் கல்வியும், அறிவு வளர்ச்சிக்கு விஞ்ஞானக் கல்வியும் தேவை. இவையிரண்டும் ஒருசேர வளர்ந்தாலொழிய மனிதன் முழுத்தன்மை பெற்றவனாக வளர முடியாது. மாணவர் உலகம் இதை நன்கு மனத்தில் பதித்து, வாய்ப்புள்ளபொழுதே மேலும் மேலும் கற்கின்ற, ஓயாது கற்கின்ற பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும். கற்பதுகூட ஒருவகைப் பழக்கம்தான். ஓயாது படித்துப் பழக்கப்பட்டவர்கள் க்ாலத்தை வீணடிக்க [ {}fTÍ–1-fTÍTÉSÉT. கல்வி கரையில், கற்பவர் நாள்சில ஆகலின், காலத்தை வீணடிக்காமல் கற்போமாக, மேலும் மேலும் கற்போமாக, - -