உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக வரலாறு-சங்ககாலம்-அரசர்கள்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

106

 தமிழக மலைகளுள் தலைசிறந்ததும், தமிழ் மொழிக்கு இலக்கணம் கண்ட குறுமுனிவன் இருந்ததாகக் கூறப்படுவதும் ஆய பொதிய மலையைச் சூழ உள்ள நாடு, ஆய்நாடு எனப்படும். அது இமயத்திற்கு நிகரானது என்கிறார் மோசியார்24. கி. பி. 119—161ல் வாழ்ந்திருந்த நில நூல் பேராசிரியர் தாலமி அவர்கள், ஆய் நாட்டையும், அதன் துறைமுகங்களையும் குறிப்பிட்டுள்ளார்.

புலவர்களின் பாக்கள் வழி அறியலாம் ஆய் வரலாறு இது; ஆய்கானம், நறுமலர் நிறைந்தது,25 யானைகள் மலிந்தது. சிறந்த கொற்றமும் கொடையும் வாய்ந்தவன் ஆய் ஆய். நாட்டினுள், பாடிப்பரிசில் பெறும் ஆடுமகள் நுழைவது எளிது. ஆனால் படை எடுத்து வரும் பகைவர் நுழைலும் அரிது.26 பரிசிலாக, யானைகளையே கொடுப்பன். நாகம் ஒன்று அவனுக்கு அளித்த கலிங்கத்தை, ஆலமர் செல்வனுக்கு அளித்துவிட்டான் என்பர். இடைக்கழி நாட்டுப்புலவர்.27 புலவர் எண்மர் பாராட்டிலும் மோசிகீரனார் பாராட்டிய பாராட்டே பெரிது என்பதால், "மோசி பாடிய ஆய்" எனப் பாராட்டியுள்ளார் பெருஞ்சித்திரனார்.28 ஆய் மறைந்த பின்னரும், வாழ்ந்து வருந்திப் பாடியவர்கள், மோசியாரும்,29 குட்டுவன் கீரனாரும்.30

3. ஓரி

இவனைப் பாடிய புலவர்கள் இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார்.31 கபிலர்32கல்லாடனார்,33 கழைதின்யானையார்,34 பரணா்,35 பாலத்தனார்36 வன்பரணர்,37 பெருஞ்சித்திரனார். ஆக எண்மர் ஆவர்.