பக்கம்:திருக்குறள் தெளிவு.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரசியல் 105 46. சிறு தன்மையினரின் குழுவைச் சேராமை பெருந்தன்மை உடையவர் சிறுதன்மையினரின் குழுவைச் சேர அஞ்சுவர் சிறு தன்மையினரோ, சிறியோர் குழுவை உறவாகச் சூழ்ந்து கொள்வர். 451 தண்ணீர் தான் சேர்ந்துள்ள தரையின் தன்மையால் வேறுபட்டு நிறம் சுவை முதலியனவற்றில் அவ்வாறே இருக்கும்; அதுபோல, மக்கட்கு அறிவு சேர்ந்துள்ள குழுவின் தன்மையை உடையதாக இருக்கும். 452 மக்கட்கு உணர்ச்சி மனநிலைக்கு ஏற்பத் தோன்றும்; இவன் இப்பேர்ப்பட்டவன் என்னும் சொல்லோ, சேர்ந்து பழகும் இனத்திற்கேற்ப அமையும். 453 ஒருவனுக்கு அறிவு அவனது மனத்தைப் பொறுத்ததுபோல் வெளிக்குத் தோன்றி, உண்மையில் கூடிப் பழகும் இனத்தைப் பொறுத்ததாகவே இருக்கும். 45.4 உள்ளத்தின் தூய்மை, செய்யும் செயலின் தூய்மை ஆகிய இரண்டும் பழகும் இனத்தின் தூய்மையை அடிப்படையாகக் கொண்டே அமையும். .455 உள்ளம் தூய்மையானவர்க்குப் பிள்ளைகள் நல்லவரா யிருப்பர்; தூய இனத்தில் சேர்ந்தவர்க்கு நன்மையாய் முடியாத செயலே இல்லை. 456 உள்ளத் தூய்மை உயிர்க்கு உறுதி பயக்கும்; இனத்தின் தூய்மை எல்லாப் புகழும் சேர்க்கும். 457 நல்ல மனப்பாங்கு உடையவரா யிருப்பினும், உயர்ந்தோர்க்கு நல்ல இனச்சேர்க்கை மேலும் காப்பளிக்கும். 458 மனத்தின் சிறப்பால் மறுமை யின்பம் கிடைக்கும் மற்று அதுவும் பழகும் இனத்தின் சிறப்பால் காப்புடையதாகும். 4.59 நல்லோர் குழுவினும் சிறந்த துணை வேறில்லை; தீயோர் குழுவை விடத் தொல்லை தருவதும் வேறொன்றும் இல்லை. 46 O