பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

89

தெபோர வாரன்டி எஸ்தோனியா (1%. 1916)

சரீமா தீவுக்குமேல் பறக்கும்போதில்

மெல்லெனஓர் ஒத்திசையில் மேவும் உன்றன் பெயரும் மெத்தனமாய்க் குளிர்விறைத்து நெகிழ்வின்றி ஒலிக்கும் சொல்லிடும்எச் சீரிசையும் தொடர்பிலாத ஒன்று சூழ்ந்திசைக்கும் உட்செவியின் சுவை.உணர நன்று.

ஒ சாரிமா! ஒ சாரிமா! யான்அறிந்த அன்புருவத் தோற்றஎழில் எல்லாம் வைகறையின் இனியபனித் திரைமறைவில் ஒளிரும். தேன்தெறிக்கும் திவலைகளால் கரைகள் மென்மை மேவும்: தெரியும்கடற் கரைகளையே தெறிக்கும்.அலை கரைக்கும்.

மொட்டொன்றைக் கடலினிலே விட்டெறிந்தால் போலே முழுமூச்சாய் அலைகளொடும் சுழன்றுயர்ந்து நிற்பாய், பற்றுடனே வழிபாட்டில் பாராட்டும் இன்பம் பற்றியே நீ கடல்தெய்வம் பரவிஏத்து கின்றாய்.

செங்கதிரும் நீழல்களும் விளையாடும் பள்ளத் தாக்குகளை விழியாரக் கண்டுதிளைக் கின்றேன். எங்கணும் நற் சாலைபல! விரிகுடாவில், ஆஆ. இமைத்திறக்கைமின்னமி ன்னப் பிறழ்கின்ற மீன்கள்.

3