பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

159


எனவரும் அருணகிரியார் வாய்மொழியைத் தன்னகத்தில் கொண்டு விளங்குவதாகும்.

'கட்டிமுண்டகரபாலி'

எனத் தொடங்கும் தில்லைத்திருப்புகழில்

'துக்கம்வெந்துவிழ ஞானமுண்டு குடில்
வச்சிரங்களென மேனி தங்கமுற
சுத்தகம் புகுத வேதவிந்தையொடு-புகழ்வேனோ'

(திருப்புகழ் 361)

எனவரும் பகுதியை ஒத்தது,

மன்னுகின்ற பொன்வடிவும் மந்திரமாம் வடிவும்
வான் வடிவும்கொடுத்தெனக்கு

(திருவருட்பா 4150)

என வள்ளலார் பாடியருளிய தொடராகும்.

ஆவதும் நின்னால் அழிவதுவும் நின்னால் எனயான்
நோவதுவும் கண்டு அயலில்நோக்கினையே

(நெஞ்சறிவுறுத்தல் கண்ணி 586)

என வள்ளலார் தம்நெஞ்சை நோக்கிக் கூறிய கூற்று,

கெடுக்க வல்லதும் கெட்டவர் தங்களை
எடுக்க வல்லதும் இம்மனம்

(பிரபுலிங்கலீலை சாதகாங்ககதி-15)

எனத் துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் மனத்தின் இயல்பைக் குறித்துக்கூறிய கருத்தினை நினைவுபடுத்துதல் அறியத்தக்கதாகும்.

வெண்பா, கட்டளைக் கலித்துறை, ஆசிரியவிருத்தம் ஆசிரியம் ஆகிய நால்வகைப் பாக்களால் சம்பந்தர்