பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 - ifi- Gt தொல்காப்பியம்-பொருளதிகாரம்-உரைவளம்

திணையாம் எனத் தொல்காப்பியனார் பொதுப்படக்கூறிய இவ் விலக்கணத்தினை அடிப்படையாகக் கொண்டே தன்மேற் படை யெடுத்து வரும் வஞ்சி வேந்தன் சேனையினைப் போரில் எதிர் ஏற்றுத் தடுத்து நிறுத்தல் காஞ்சித் திணையாம் என்னும் சிறப்பிலக் கணமும் பிற்காலத்து உருப்பெறுவதாயிற்று. எல்லாப் பொரு வினும் சிறந்த சிறப்பென்னும் செம்பொருளைப் பெறுதல் வேண்டி, யாக்கை, இளமை, செல்வம் ஆகியவற்றால் நிலைபேறில் லாத இவ்வுலகவாழ்க்கையில் நேரும் பலவகைத் துன்பங்களையும் பொறுத்து நிற்றல் காஞ்சித்திணையாதல்போலவே, ஒன்றாவுலகத் துயர்ந்த புகழைப் பெறுதல் வேண்டி உலகியலில் நேரும் பல வகை யின்னல்களுக்கிடையே தன்மேற் படையெடுத்து வந்த பகைவர் சேனையைத் தடுத்து நிறுத்தலாகிய இப் போர்ச் செயலும் காஞ்சித் திணையாம். ஆதலின் எதிரூன்றல் காஞ்சி' என்னும் சிறப்பிலக்கணமும் இதற்கு உரியதாயிற்று, தொல்காப்பியனார் கூறிய காஞ்சித் திணையின் பொது இலக்கணத்தினுள்ளே பிற்காலத்தார் வகுத்துரைத்த எதிருன்றல் காஞ்சி' என்னும் சிறப் பிலக்கணமும் அடங்குதல் காணலாம். இவ்வாறு வஞ்சியும் காஞ்சியும் தம்முள் மாறுபட்ட இருவேறு போர்ச் செயல்கள் என்னும் புறத்தினைப் பாகுபாடு இளங்கோவடிகளுக்குப் பன்னூறு ஆண்டுகளுக்கு முன்னரே தமிழகத்தில் நிலைபெற்று வழங்கியதென்பதனை,

‘தென்றிசை யென்றன் வஞ்சியொடு வடதிசை நின்றெதி குன்றிய நீள்பெருங் காஞ்சியும்' எனவரும் சிலப்பதிகாரத் தொடரால் நன்குணரலாம். 19. மாற்றருங் கூற்றஞ் சாற்றிய பெருமையும்

கழிந்தோர் ஒழிந்தோர்க்குக் காட்டிய முதுமையும் பண்புற வரூஉம் பகுதி நோக்கிப் புண்கிழித்து முடியும் மறத்தி னானும் ஏமச் சுற்றம் இன்றிப் புண்ணோன் போய் ஓம்பிய போய்ப் பக்கமும் இன்னனென்று இரங்கிய மன்னை யானும் இன்னது பிழைப்பின் இதுவா கியரெனத் துன்னருஞ் சிறப்பின் வஞ்சினத் தானும் இன்னகை மனைவி பேணய் புண்ணோன் துன்னுதல் கடித்த தொடா அக் காஞ்சியும் நீத்த கணவற் றீர்த்த வேலின்