பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5

களின் வளர்ச்சிக்கு இன்றியமையாத கூறுபாடுகளையும் தன்பாற் கொண்டு திகழும் தனிச் சிறப்புடைய முழுமை வாய்ந்த இயற்றமி ழிலக்கண நூலாகும். இந்நூல் இடைச்சங்கத்தார்க்கும் கடைச் சங்கத்தார்க்கும் இலக்கண நூலாய் விளங்கியதென்பதனை முச்சங்கங்களின் வரலாறு கூறுமிடத்து இறையனார் களவியலுரை யாசிரியர் த்ெளிவாக விளக்கியுள்ளமை காணலாம். -

களப்பிரர், பல்லவர் முதலிய அயல் மன்னர்களின் படை யெடுப்பின் காரணமாகத் தமிழகத்தில் ஏற்பட்ட அரசியல் மாறுதல்களாலும் நாட்டில் மழையின்மையாற் பல்லாண்டுகள் தொடர்ந்து வருத்திய பஞ்சத்தினாலும் தமிழ்மக்கள் தமிழ் வளர்ச்சியிற் சோர்வுற்றமையால் தமிழியல் நூலாகிய தொல்காப் பியத்தின் பயிற்சி பாண்டிநாட்டில் இடைக்காலத்திற் குன்றிய தென்பது இறையனார் களவியல் முன்னுரையாலும்

" வடுவில்காப்பிய மதுசைவாய்ப்பொருள்

மரபு வீட்டியதால் வழுதியாட்சியை வளவன் மாற்றிட

மதுரை கூப்பிடுநாள் அடைவுகோத்தன அமுத சூத்திசம்

அறுபதாய்ச் சமை நூல் அமரர் கீழ்ப்பட அறிஞர்மேற்பட

அருளு மூர்த்திகளே” எனவரும் ஒட்டக்கூத்தர் வாய்மொழியாலும் ஒருவாறு உய்த் துணரப்படும். தமிழரொடு தொடர்பில்லாத அயலவர் சமுதாய வாழ்வில் மேலோங்கிய பிற்றைநாளில் தமிழ் மக்களின் தொன்மை நாகரிகத்தோடு பொருந்தாத கொள்கைகள் சில தொன்மை யுடையன போலத் தமிழ் மக்களது வாழ்வில் புகுத்தப் பெற்றமை யால் அக்கருத்துக்களிற் சில தொல்காப்பிய மரபியலில் நாள டைவில் இடம்பெறுவனவாயின.

இங்ங்னம் தமிழ் மக்களது வாழ்க்கை முறை அயலவர் கூட்டுற வாற் சிதைந்து மாறிய பிற்காலத்தில் தொல்காப்பியத்தின் பொருள் மரபினை உள்ளவாறறியும் வாய்ப்பும் நாளடைவிற் குறைந்து போயிற்று. இத்தகைய இடர்நிலையினும் தமிழர்தம் வாழ்வியல் நூலாகிய தொல்காப்பியத்திற்குப் பொருள்கண்டு தெளிந்து உரைவரைந்த பெருமை உரையாசிரியர் எனப் போற்றப்