26 கொடைகள் இரண்டாம் துளஜா காலத்தில் பல நிலக்கொடைகள் உண்டு. கி. பி. 1771இல் தாராசுரத்தில் சத்திரம் தண்ணிர்ப்பந்தல் அக்கிர காரம் அமைக்கப்பெற்று ராஜஸாபாயின் மேற்பார்வையில் விடப்பெற்றன." கி. பி. 1767இல் மன்னார்குடி சுபாவில் யமுனாம்பாபுரத்தில் 60 வேலி நிலத்தைச் சர்வமானியம் அளித்தார்." 1771இல் வீணை காளஹஸ்தி அய்யருக்குப் 'பெரம்னுரர்' என்ற ஊரில் 1 வேலி 8 மா ஸர்வமானியம் அளிக்கப்பெற்றது." வேளாங்குடி மாகாணம் ஆவுடையார் கோயில் அம்மனுக்கு வெள்ளிக் கிழமை கட்டளை 58 குழி அளிக்கப்பட்டது." 1786இல் பாளம்பட் அவர்கட்குத் திருப்பூந்துருத்தி வைத்தியநாதம் பேட்டையில் ஸர்வமானியம் 1 வேலி 8 மா அளிக்கப்பட்டது." + சுவீகாரம் எடுத்துக் கொண்டமை தனக்குப் பின் அரசாளப் பிறந்த மகன் இறந்துவிட்டபடியால் தம் தாயாதிகளுக்குள் ஒருவர் ஆகிய சரபோஜியைச் சுவீகாரம் எடுத்துக்கொண்டார். கி. பி. 1784க்குரிய குறிப்பு." "ராஜபூரீ மகாராஜாசாயபு புத்திர சுவீகாரம் தத்த ஹோமம் செய்து வாங்கிக்கொண்டது. இவருக்குச் சரபோஜி ராஜா சாஹேப் என்று நாமகரணம் செய்தார். இந்த மாதிரியே எல்லா சகல அதிகாரிகளுக்கும் பேர் எழுதுகிறது" என்றுள்ளது. சுவீகாரம் எடுத்துக்கொண்ட தேதி 23-1-1787 என்பர் வரலாற்றாசிரியர்." ஆகவே 1784 என்பது தவறுபோலும். கி. பி. 1793க்குரிய குறிப்பு,"அ புத்திர ஸ்வீகாரம் செய்ய முகூர்த்தம் ஸ்ராவன சதுர்த்தி ஞாயிறு நாழிகை 13-33 உபரி பஞ்சமி ரேவதி நக்ஷத்திரம் நாழிகை 15-15, உபரி அசுவனி இந்தச் சுபதினம் 14 நாழிகைக்குமேல் 16 நாழிகைக்குள் விருச்சிக லக்னத்தில் முகூர்த்தம் ' என்பதாகும். இது 25-8-1793 ஆகிறது. இது சரபோஜியை ஸ்வீகாரம் எடுத்த தேதியாகாது. இது யார்க்குரிய குறிப்பு என்று தெரிய வாய்ப்பில்லை. பொது : 1801இல் துளஜாவின் " அஸ்தி ' காசிக்கு எடுத்துச் செல்லப்பெற்றுக் கங்கையில் இடப்பெற்றது என்று ஒரு குறிப்பு அறிவிக்கிறது." கி. பி. 1787இல் இறந்தபோதிலும் அதை வைத்திருந்து கங்கையில் கரைத்தனர் என்பது வியப்புக்குரியதாகும். 63. 3-143,144 64. 3–136 65. 3-265 66, 3-265 67. 4-367 68. ச. ம. மோ. த. 4-19 69. Page 83, A History of British Diplomacy in Tanjore - K. Rajayyan. 69.அ. ச. ம. மோ. த. 18-62 70. ச. ம. மோ. த. 24-40 --
பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/36
Appearance