42 திருக்குறள் கதைகள் " அப்பா, நோட்டு வாங்கப் பணம் வேனும் ' என்று கூறிக்கொண்டே எதிரில் வந்து நின்ருன் அவருடைய மகன். " சீ, போடா! வெளியே புறப்படறப்போ அபசகுனம் மாதிரி !' என்று எரிச்சலுடன் கூறிவிட்டுக் கிளம்பினர் அவர். - அன்று முழுதும் ராமண்ணு எங்கெங்கோ அலைந்தார். தெரிந்தவர்களிடமெல்லாம் கடன் கேட்டுப் பார்த்தார். யாரிடத்திலும் காலணுப் பெயரவில்லை. நடந்து நடந்து, அலைந்து அலைந்து, பசியும் களைப்பும் மேலிட்டவராய் வீட்டுக்குத் திரும்பி வந்தார். சே ! நானும் ஒரு மனிதன ? இதுவும் ஒரு பிழைப்பா ? ஊரெல்லாம் என் நடிப்பைக் கண்டு மகிழ்கிறது. ஆளுல் என் உள்ளவேதனையை அது அறியவில்லை. என் குடும்பம் சோற்றுக்கில்லாமல் திண்டாடுகிறது. ஆனால் ஊரார் அதைப்பற்றிக் கவலைப்படவில்லை. நான் திண்டாடுகிறேன். உலகம் என்னைக் கொண்டாடுகிறது. இதுதான் ஒரு கோமாளியின் வாழ்க்கையா? இன்னும் எத்தனை காலத் துக்கு நான் இவ்வாறு வாழ்க்கையுடன் போராடுவது ?... து என்று அலுத்துக் கொண்டார் ராமண்ணு. ராமண்ணு தன் மனைவியை அழைத்து, குடிக்கக் கொஞ்: சம் மோர் இருந்தால் கொடு' என்ருர். அவர் மனைவி மோருக்குப் பதிலாக நீரைக் கொண்டு வந்து கொடுத்துவிட்டு, 'இதுதான் இன்னிக்கு மோர் : பழைய பாக்கியைக் கொடுத்தாத்தான் இனிமே தயிர் போடுவேன்னு சொல்லிட்டா தயிர்க்காரி ' என்று வருத்தம் தோய்ந்த குரலில் கூறிள்ை. தங்கம் 1 வாங்கிய கடனைத்தான் நம்மால் சரியாத் திருப்பிக் கொடுக்க முடிவதில்லையே! அவங்களும் எத்தனை நாளைக்குத்தான் கடன் கொடுத்துக்கிட்டு இருப்பாங்க ? . என்ருர் ராமண்ணு. சரி : நீங்க போன காரியம் என்ன ஆச்சு ?" என்று கேட்டாள் தங்கம்மாள். -
பக்கம்:திருக்குறள் கதைகள்.pdf/41
Appearance