5
5
'தம்பி! நல்ல தம்பி! கனிகளை விட்டு, காய்களைச் சாப்பிட்டார்கள் என்பதை நீ நல்லபடியாகப் புரிந்து கொண்டாய்.” - 'நல்ல சொற்கள் இனிமையாக இருக்கும், கெட்ட சொற்கள் துன்பத்தைக் கொடுக்கும் என்று நீதானே முன்பு சொன்னாய்? ஆம் அண்ணா, நான்தான் சொன்னேன்.” கனிகளையும், காய்களையும் பற்றி நாம் இப்போது பேசிக் கொண்டோமே, தம்பி! அவைகளில் நல்ல சொற்க ளும் கெட்ட சொற்களும் எவை மாதிரி இருக்கின்றன? 'இதோ சொல்லுகிறேன், அண்ணா! நல்ல சொற்கள் பழுத்த கனிகள் மாதிரி இருக்கின்றன. கெட்ட சொற்கள், துன்பத்தைக் கொடுக்கும், காய்கள் மாதிரி இருக்கின்றன.” 'தம்பி! நீ சொன்னதுதான், சரியான பதில்! இதுதான், சரியான விடை இன்னொரு கேள்வி கேட்கிறேன். அதற்கு விடை சொல் பார்ப்போம்! கனிகளை விட்டுவிட்டு, ஏன் காய்களை உண்டார்கள்?’’ அது கெட்ட பழக்கம் அண்ணா! அதை மாற்றிக் கொள்ளத் தான் வேண்டும். கனிகள் இன்பத்தைக் கொடுக் கும். காய்கள் துன்பத்தைக் கொடுக்கும். இதுதான் எனக் குக் தெரிந்த விடை, அண்ணா!' தம்பி! நீ நல்லபடியாகப் புரிந்து கொண்டுதான் விடை சொல்லுகிறாய். இனிமையான சொற்களும் நமது நாவில் இருக்கின்றன, துன்பத்தைத் தரும் சொற்களும் இருக்கின்றன. இனிமையான சொற்களையும் நாம் பேச லாம். துன்பத்தைத் தரும் சொற்களையும் நாம் பேசலாம். இனிமையான சொற்கள் நம்மிடத்தில் இருக்கும்பொது, துன்பத்தைத் தரும் சொற்களை நாம் பேசித் துன்பப் படலாமா? - -