பக்கம்:சிந்தனைக் களஞ்சியம்.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

186

இருட்டாகப் போய்விடும். பகல்கூட அவர்களுக்கு வெளிச்ச மில்லாமல் இருட்டாய்த்தான் தெரியும்... . எண்ணிறந்த மகான்களும் கவிஞர்களும் எழுதிய நூல்களையெல்லாம் .படிக்கிறோம். அத்தனையும், எதற்கு? நாம் நல்லபடியாக, இன்பமாக, மகிழ்ச்சியாக, களிப்பாக, ஆனந்தமாக, கவலையில்லாமல் வாழ வேண்டும் என்பதற்காகத்தானே....!

செவிகளின் சிறப்பு

நமக்கு இருக்கக்கூடிய. உறுப்புக்களிலே காதுகள் தான் மிக முக்கியமானவை. மற்ற அவயவங்களும் முக்கியமானவைதான் என்றாலும் காதுகளுக்கென்று ஒரு தனிப்பெருமை இருப்பதால் தான் அநேக செய்திகளை ஒருவரிடம் சொல்லி விட்டுக் கடைசியில் 'எதற்கும் இதை உங்கள் காதில் போட்டு வைக்கிறேன்' என்று சொல்கிறார்கள்.

காதுக்குத் தனிச் சிறப்பு இருப்பதால் தான் ஆசிரியர்கள் கூட. மாணவர்களைக் காதைப் பிடித்துத் திருகுகிறார்கள்!

மனிதர்களுக்கு இருக்கின்ற காதுகளுக்கும் மிருகங்களுக்கு இருக்கின்ற காதுகளுக்கும் வேறுபாடுகள் இருக்கின்றன.

சுவைத்து உண்ணுதல்

நாவினால் சுவைத்து நாம் சாப்பிடுவதுபோல் மிருகங்களும் சாப்பிடுகின்றன. உண்ணுவதைப் பொறுத்த வரையில் நமக்கும் மிருகங்களுக்கும் வித்தியாசம் தெரிவதில்லை. ஆனால், கேட்கிற அறிவு நமக்குத்தான் கொடுக்கப்பட்டிருக்கிறது. நம்மைப்போலவே மிருகங்களுக்கும் இரண்டு காதுகள் இருந்தாலும் அவற்றிற்குக் கேட்.கிற அறிவு கிடையாது. அதனால்தான் பொதுக்