தந்தையும் மகளும்
1அப்பா! சூரியன் ஒரு பிருமாண்டமான நெருப்பு உருண்டை என்று கூறுகிறார்களே, அப்படி இருந்தும் அது நம்மை எரித்து விடவில்லையே, அதன் காரணம் என்ன?
அமமா! சூரியன் மிகப் பெரியதோர் நெருப்புக் கோளம்தான். பூமியின் சுற்றளவு 25 ஆயிரம் மைல். அவ்வளவு பெரிய பூமியைப் போல் மூன்று லட்சம் 32 ஆயிரம் மடங்கு பெரியது சூரியன். அத்துடன் அதன் சூடு விளிம்பில் 6 ஆயிரம் டிகிரி என்றும், நடுவில் 20
ஆயிரம் டிகிரி என்றும் வான சாஸ்திரிகள் கணக்கிடுகிறார்கள். அப்படியானால் அதன் சூடு மொத்தம் எவ்வளவு என்று யாரால் அறிந்து கூறமுடியும்?
அப்படியிருந்தும் சூரியன் நம்மை எரித்து விடாமல் இருக்கிறதே, அதன் காரணம் என்ன? சூரியனிடமிருந்துவரும் ஒளியில் ஏழு நிறக்கதிர்கள் சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள், பச்சை , நீலம், கருநீலம், ஊதா என்ற வரிசையில் உள. சிவப்புக்கு அப்புறமும், ஊதாவுக்கு அப்புறமும், கதிர்கள் உண்டு. நமக்கு வெய்யிலால் உண்டாகும் சூடு சிவப்புக்கு அப்புறமுள்ள கதிர்களால் தான். அந்தக் கதிர்களின்