உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தந்தையும் மகளும்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

தந்தையும்

ஒரே நேர்க்கோட்டிலும் இருக்கும். அப்பொழுது சூரியன் நமக்குத் தெரியாமல் போய்விடும். அப்படி சூரியன் மறைவதைத்தான் சூரிய கிரகணம் என்று கூறுவார்கள். அவ்வாறு சூரியன் மறையும் சமயத்தில் பார்த்தால் வானத்திலுள்ள நட்சத்திரங்கள் எல்லாம் நம்முடைய கண்களுக்கு நன்றாகத் தெரியும்.

அது மட்டுமன்று அம்மா! சூரிய கிரகணம் உண்டாகாத காலத்திலுங்கூட நாம் பகலில் நட்சத்திரங்களைப் பார்க்கலாம். அதற்கு நம்முடைய வெறுங்கண்கள் உதவா. பெரிய தொலைநோக்கி வழியாகப் பார்க்க வேண்டும். தொலைநோக்கி நட்சத்திரங்களின் உருவத்தைப் பன்மடங்கு பெரிதாக ஆக்கிக் காட்டுமாதலால் பகலில் சூரியன் பிரகாசித்துக் கொண்டிருக்கும் பொழுதுகூட நாம் நட்சத்திரங்களைப் பார்க்க முடியும்.

10அப்பா! நட்சத்திரங்களிலும் பலவிதமான வஸ்துக்கள் இருப்பதாகக் கூறுகிறார்களே, அதற்குக் காரணம் என்ன?

ஆம், அம்மா! பூமியில் காணப்படுவது போலவே சூரியனிலும் நட்சத்திரங்களிலும் அநேக வஸ்துக்கள் காணப்படுவதாக அறிஞர்கள் கூறுகிறார்கள். அந்த விஷயம் அவர்கட்கு எப்படித் தெரியும் என்று கேட்பாய்.

அம்மா! சூரிய ஒளியை முக்கோணப் பளிங்கு வழியாகச் செல்லும்படி செய்து ஒரு வெண் திரையின் மீது விழுமபடி செய்தால் அந்த ஒளி வானவில் போல்

ஏழு நிறங்களுடையதாக விரிந்து அந்தத் திரையில் தோன்றும்.அப்படித் தோன்றுவதை ஒன்பது அடி அகலமுடையதாகப் பெரிதாக்கினால் அப்பொழுது அதில் அநேக செங்குத்துக் கோடுகள் காணப்படும். அதற்குக் காரணம் என்ன?