சுெ.சமுத்திரம் فسكنوع / 43 பாவாடை தாவணிகள்...கூடவே ஒரு விபூதிப் பையன். கிண்டல் செய்கிறார்களோ? மசூதி இடிக்கப்பட்டதைச் சுட்டிக் காட்டுகிறார்களோ? சம்சுதீன், அவர்களைப் பார்த்து பதிலுக்குப் புன்னகை கூடப்பூக்காமல் நடந்தான். மனம்போன போக்கில் நினைத்து, கால்போன போக்கில் நடந்தவன் தனது கால்களுக்கு இடையே ஒரு பந்து சிக்குவதைப் பார்த்தான். ஓடிவந்த இரண்டுபேர், அவனை எடுத்துக் கொடு என்று கூடக் கேட்காமல், அவன் கால்களை பலவந்தமாக அகலமாக்கி அந்தக் கால் பந்தை எடுத்துக் கொண்டு போனார்கள். மரியாதைக்குக் கூட 'சாரி என்ற வார்த்தையில்லை. இதுபோதாது என்று ஆங்காங்கே கூடிக்கூடிப் பேசுகிறார்கள். பாபர் மசூதி இடிபட்டதைத்தானோ..? சம்சுதீனால், அங்கே நிற்க முடியவில்லை. அவனைப் பார்த்தவுடனே ஓடிவரும் உடற்பயிற்சி ஆசிரியரும் என்.சி.சி.மாஸ்டரும் முகத்தைத் திருப்பிக் கொள்கிறார்கள். எதிரே வந்த முத்துலட்சுமி வழக்கம் போல் அவனைப் பார்த்துச்சிரிக்காமல், அவன் எங்கே பேசி விடுவானோ என்று பயந்ததுபோல் வேறு பக்கமாகத் திரும்பி நடக்கிறாள். சம்சுதீன் கூனிக்குறுகி நடந்தான். தள்ளாடிய நாற்காலி நுனியில் அல்லாடியபடியே கிடந்த தாத்தா அப்துல் மஜீத், முன்பு தன்னிடம் முட்டி மோதி ஆற்றொண்ணாத் துயரத் தோடு கதை கதையாய்ச் சொன்ன விவரங்கள் இப்போது விஸ்வரூபமெடுத்து அவன் காதுகளைக் குத்தின. அவன் தாத்தா தீவிர காங்கிரஸ் தொண்டராம். காங்கிரஸ் விடுதலை இயக்க ஊர்வலங்களில் அண்ணல் காந்தியின் படத்தைத் தூக்கிக் கொண்டு முன்னால் போனவராம். ஆனால் அண்ணன் கள் இருவரும் முஸ்லீம் லீக்காம். காங்கிரஸ் ஊர்வலத்திற்குப் போட்டியாக அல்லது முன்னோடியாக ஜின்னாவின் படத்தை எடுத்துக் கொண்டு ஊர்வலமாய்ப் போவார்களாம். நாட்டுப் பிரிவினையும் சுதந்திரமும் ஒருசேர வந்தபோது அவர்கள்
பக்கம்:மூட்டம்.pdf/45
Appearance